செவ்வாய், 3 டிசம்பர், 2019

ஏன் படிக்க வேண்டும்? சுவாரஸ்ய பகுதி உள்ளே... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!கலக்கலான ஜோக்ஸ் !!
   
குணா : எங்க அப்பாவுக்கு ரொம்ப நக்கல் ஜாஸ்தியாயிடுச்சு!
சீனு : ஏன்? அப்படி என்ன சொன்னாரு?
குணா : வேலை இல்லாம சும்மா இருக்கற நேரத்துல, ஜனாதிபதி போஸ்டுக்கு அப்ளை பண்ண சொல்றாரு!
சீனு : 😂😂
---------------------------------------------------------------------------------------------
விசு : எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்....
சோமு : அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?
விசு : 😬😬
---------------------------------------------------------------------------------------------
அருண் : ஒரு பூனை ஏன் ஒரு ஸ்கூலை சுத்தி சுத்தி வருது?
குமார் : தெரியலையே...
அருண் : ஏன்னா... அது ஒரு 'எலி"மெண்டரி ஸ்கூலாம்.
குமார் : 😝😝
---------------------------------------------------------------------------------------------
இதையெல்லாம் நமது வாழ்வில் எப்போது கற்றுக் கொள்வோம்..!!

ஒரு வங்கிக் கொள்ளையின்போது..... கொள்ளையர்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினார்கள்.

அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். உடனே அனைவரும் கீழே படுத்துவிட்டார்கள்....

கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையர்களுள் ஒருவன் சொன்னான் 'வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்" என்று.
மற்றொருவன் சொன்னான், அவசரம் வேண்டாம். பணம் நிறைய இருக்கிறது. நேரம் அதிகம் செலவாகும். அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லிவிடும்.

இதைத்தான், படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்!

கொள்ளை நடந்த போதே, வங்கியின் மேலாளர் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்தபோது, அவருடைய மேலதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்.

'வங்கியில் கொள்ளை போனது 20 கோடிதான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்.

'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்பது இதுதான்.

இதை கேட்ட மற்றொரு அதிகாரி 'வருடம் ஒரு கொள்ளை, இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும்" என்றார்.

இதுதான் சுயநலமான உலகம்!

மறுநாள் செய்திகளில், வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது. அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி. அவர் பங்கு 50 கோடி.

கொள்ளையர்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மெஷின் வாங்கி வந்து, பணத்தை எண்ணத் தொடங்கினர். எவ்வளவு எண்ணியும், அவர்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை.

கொள்ளையர்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து, நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்.

ஆனால் இந்த வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், 80 கோடி கொள்ளை அடித்துவிட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது.

'இதற்குத்தான் படித்திருக்க வேண்டும்." என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்