Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 டிசம்பர், 2019

இது என்ன சாமுத்திரிகா லட்சண ஜோதிடம்?... புதுசா இருக்கே... வாங்க பார்க்கலாம்...!!

 Related image

ஜோதிடமும்... அதன் பிரிவுகளும்...!!!

ஜோதிடம் என்பது ஒருவன் பிறந்த கணத்தில் இருந்த கோள்களின் நிலை மற்றும் விண்மீன்களின் அமைப்பினைக் கொண்டு கணக்கிடப்படுவதாகும்.

ராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக்கூறவும் உபயோகப்படுவது ஜோதிடம்.

ஜோதிடத்தில் வானசாஸ்திர ஜோதிடம், மாண்டேன் ஜோதிடம், ஜோதிடம், எண்ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம் (ஆருடம்), கைரேகை ஜோதிடம், ஒலி அலை ஜோதிடம், சாமுத்திரிகா லட்சண ஜோதிடம், கையெழுத்து ஜோதிடம், வாஸ்து சாஸ்திர ஜோதிடம் போன்ற பல பிரிவுகள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.


ஜோதிட பிரிவுகள் :

வானசாஸ்திர ஜோதிடம் :

வான் மண்டலத்தில் ஏற்படும் பல மாற்றங்களால் பூமியில் ஏற்படும் பருவநிலைகளின் மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் மற்றும் தட்பவெப்பநிலை மாற்றங்கள் போன்றவற்றை பற்றி அறிய உதவுகின்றது.

மாண்டேன் ஜோதிடம் :

ஓர் நாட்டின் பொருளாதார நிலை, நாணய மதிப்பு, அரசியல் நிலை, ஏற்றுமதி, இறக்குமதியின் நிலை மற்றும் விலைவாசி கடன் போன்றவற்றை பற்றி அறிய பயன்படுத்தப்படுகின்றது.

ஜோதிடம் :

ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகள், சூழ்நிலைகள் அவன் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் பல சம்பவங்களைப் பற்றி அறிய பயன்படுகிறது.

எண் ஜோதிடம் :

ஒரு தனி மனிதனின் பிறந்த தேதிக்கு தகுந்தாற்போல் அவருடைய பெயரின் எழுத்துக்களை மாற்றி அமைப்பதன் மூலம் அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை பற்றி அறிய பயன்படுத்தப்படுகின்றது.

பிரசன்ன ஜோதிடம் :

ஓர் நபர் வந்து ஜோதிடம் பார்க்கும் நேரத்தில், அந்த நேரத்தில் இருக்கும் கிரகநிலையை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை பற்றி அறிவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

ஜோதிட பிரிவுகள் :

கைரேகை ஜோதிடம் :

ஓர் தனி நபரின் கைரேகையை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒலி அலை ஜோதிடம் :

ஒருவரின் ஒலி அலைகளை மாற்றி அமைப்பதன் மூலம் அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகளை பற்றி அறிய பயன்படுத்தபடுகின்றது.

சாமுத்திரிகா லட்சண ஜோதிடம் :

ஒருவரின் முகமைப்பை வைத்தும், உடலமைப்பை வைத்தும் அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகளை பற்றி அறிய பயன்படுத்தப்படுகின்றது.

கையெழுத்து ஜோதிடம் :

ஒருவர் எழுதும் கையெழுத்தை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகளை பற்றி அறிய பயன்படுகிறது.

வாஸ்து சாஸ்திரம் :

ஒருவர் வசிக்கும் வீட்டின் அளவுகளை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகளை பற்றி அறிய உதவுகிறது. 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக