>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 3 டிசம்பர், 2019

    சமையல் செய்யும் சமையலறை... சுத்தமாக வைத்திருப்பது எப்படி?

     Image result for சமையலறை... சுத்தமாக வைத்திருப்பது எப்படி?
    மையலறை சுத்தமாக இருந்தால் நாம் சமைக்கும் உணவும் சுத்தமாக இருக்கும். சமையலறையை சுத்தமாக வைத்திருக்க சில வழி முறைகளை பின்பற்றுவோம்.
    நம் சமையலறையில் குப்பைக் கூடையை பாத்திரம் கழுவும் சிங்கிற்கு கீழ் வைத்துக் கொள்ளலாம். மூடும் வசதியுடைய கூடை இருந்தால் நல்லது.
    இந்த குப்பைக் கூடையில் இருந்து கிளம்பும் துர்நாற்றத்தை தடுக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைக் கொட்டி, கூடைக்குப் பக்கத்திலேயே வைத்தால் எந்த துர்நாற்றமும் வராது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்றிக் கொள்ளலாம்.
    உங்களின் சமையல் பலகையின் மேலுள்ள கறை மற்றும் துர்நாற்றத்தை நீக்க, எலுமிச்சை சாறு அல்லது சோப்பு போன்றவற்றுடன் ஒரு மென்மையான துணியை பயன்படுத்தி லேசாக துடைத்து சுத்தப்படுத்துங்கள்.
    உணவுகள் தயாரித்து முடித்த பிறகு, சிங்க்கில் சிறிதளவு கல் உப்பை போடுங்கள். உப்பு மீது சிறிதளவு கருப்பு வினிகர் ஊற்றி, ஒரு பிரஷை பயன்படுத்தி, மெதுவாக சிங்க்கை தேய்த்து விடுங்கள். வினிகர் துர்நாற்றத்தை நீக்கவும், உப்பு கறையை நீக்கவும் பயன்படுகின்றது.
    பாத்திரத்தை துலக்கப் பயன்படுத்தும் ஸ்பாஞ்சில் கிருமிகள் அதிகமாக இருக்கும். அதன் ஒரு சதுர இன்ஞ் பரப்பிலேயே லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் குடியிருக்கும்.
    ஸ்பாஞ்சை சுத்தம் செய்யாமல் அடிக்கடி ஒரே ஸ்பாஞ்சை உபயோகித்தால் நம் கைகளில் பாக்டீரியாக்கள் படிந்து, வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலியை உருவாக்கும்.
    இதை தவிர்க்க வாரம் ஒருமுறை இந்த ஸ்பாஞ்சை மாற்றிவிட வேண்டும். அல்லது ப்ளீச்சிங் பவுடர் கலந்த வெந்நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து அலசி எடுத்தால், கிருமிகள் அழிந்துவிடும். கழுவிய பாத்திரங்களை, வெயிலில் காய வைத்து உடனுக்குடன் துடைத்து வைத்தால், தேவையில்லாத துர்நாற்றத்தையும் தடுக்க முடியும்.
    கேஸ் அடுப்பில் எண்ணெய் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க அடுப்பிலும், சமையல் மேடையிலும் திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து ஊறவிட வேண்டும். அதன் பின் தண்ணீர் ஊற்றி சுத்தமாக துடைத்தால், அடுப்பும், அடுப்பு வைத்துள்ள மேடையும் எண்ணெய் பிசுக்கு இல்லாமல் இருக்கும்.

    இரண்டு லிட்டர் தண்ணீரில் அரை கப் வினிகர், கால் கப் பேக்கிங் சோடாவைக் கலந்து சமையலறை தரையைத் துடைத்து வந்தால் தரை சுத்தமாக இருக்கும்.
    கண்ணாடி பாட்டிலில் இருந்து வீசும் துர்நாற்றத்தை போக்க, பாட்டிலில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை அளவு கடுகு அல்லது சோடா உப்பு போட்டு குலுக்கி ஊற வைத்துக் கழுவினால் வாடை அகன்றுவிடும்.
    சமைக்கும் பொருளின் அமிலத்தன்மை, பயன்படுத்தும் தண்ணீர், தரம் குறைந்த அலுமினிய பாத்திரம் போன்றவற்றால் குக்கரின் உட்புறம் எளிதில் நிறம் மாறிவிடும்.
    எனவே சமைத்த பிறகு குக்கரில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு புளி அல்லது நறுக்கிய எலுமிச்சைத் துண்டு ஒன்றை போட்டு குக்கரை கழுவி வந்தால் மீண்டும் பழைய பளபளப்பை அடையும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக