>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 3 டிசம்பர், 2019

    ராஜாவின் மனைவி மட்டும்தான் ராணியா? குட்டி கதை... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!! கலக்கலான ஜோக்ஸ் !!

    டாக்டர் : எங்க 'ஆ" காட்டுங்க பாக்கலாம்!
    சோமு : ஏன் டாக்டர் நீங்க 'ஆ" பாத்ததே இல்லையா?
    டாக்டர் : 😏😏
    -------------------------------------------------------------------------------------------------------------
    பாபு : போஸ்ட் ஆபிஸ்ல என்ன மிருகம் இருக்கும்.?
    சீனு : தெரியலையே?
    பாபு : ஒட்ட-கம் இருக்கும்.
    சீனு : 😬😬
    -------------------------------------------------------------------------------------------------------------

    பாபு : இப்படி ஏன் உலகம் போகுது?
    ராம் : ஏன்னா, கிரீன் டிரீஸ் இருக்க வேண்டிய இடத்தில், இண்'டஸ்ட்"டீரீஸ் இருக்கு.
    பாபு : 😐😐
    -------------------------------------------------------------------------------------------------------------
    அது இருந்தால் இது இல்லை... இது இருந்தால் அது இல்லை...!!

    வாடா மல்லிக்கு ஆயுள் அதிகம்... வாசமில்லை.

    வாசமுள்ள மல்லிகைக்கோ ஆயுள் குறைவு.

    கொம்புள்ள மானுக்கோ வீரம் இல்லை.

    வீரமுள்ள கீரிக்கு கொம்பு இல்லை.

    கருங்குயிலுக்கு தோகையில்லை.

    தோகையுள்ள மயிலுக்கோ இனிய குரல் இல்லை.

    நீருக்கு நிறமில்லை.

    நெருப்புக்கு ஈரமில்லை.

    காற்றுக்கு உருவமில்லை.

    கதிரவனுக்கு நிழல் இல்லை.

    எவர் வாழ்விலும் நிறைவில்லை,

    எவர் வாழ்விலும் குறைவில்லை.

    ஒன்றைக்கொடுத்து ஒன்றை எடுத்தான்.

    ஒவ்வொன்றுக்கும் காரணம் வைத்தான்.
    -------------------------------------------------------------------------------------------------------------

    புரிந்துகொள் மனிதனே அமைதி கொள்...!! ஒரு குட்டி கதை...!!

    ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும் உரையாடி கொள்கிறார்கள்....!

    இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்.

    ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள்? கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே...

    இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா?

    ஆங்கிலேயர் : அது முடியாதே...

    இந்தியர் : ஏன் முடியாது?

    ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே..

    இந்தியர் : உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும்தான் ராணி. ஆனால், எங்கள் நாட்டை பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு மகாராணிகள்தான்.

    இந்த பதிலைக்கேட்ட ஆங்கிலேயர் வாயடைத்துப் போனார்...

    ஆங்கிலேயரிடம் உரையாடிய இந்தியர் வேறு யாருமில்லை..

    'சுவாமி விவேகானந்தர்"
    -------------------------------------------------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்.

    பொருள் :

    பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களை பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினை பயனாகிய துன்பங்கள் சென்று சேராது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக