Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 டிசம்பர், 2019

சத்தான தினை கம்பு அடை

 Image result for . சத்தான தினை கம்பு அடை
ர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் என அனைவரும் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்துக் கொண்டு வந்தால் உடல் வலிமை பெறும். தினை மற்றும் கம்பில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இப்போது இந்த தினை கம்பு அடையை எப்படி செய்வது? என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தினை மாவு - 1 கப்

கம்பு மாவு - 1 கப்

பச்சரிசி மாவு - 1 கப்

கடலைப்பருப்பு - அரை கப்

துவரம் பருப்பு - அரை கப்

வர மிளகாய் - 10

தேங்காய் - அரை கப் (நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

பெருங்காயம் - 1 சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் உப்பு கலந்த நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் பருப்பு வகைகள் நன்கு ஊறியதும் அதனுடன் வர மிளகாய், பெருங்காயம் சேர்த்து மைய அரைக்க வேண்டும். பிறகு தினை மாவு, கம்பு மாவு, பச்சரிசி மாவு, அரைத்த கலவை, தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்கு மாவை கலக்க வேண்டும். பின் மாவை அரை மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

கடைசியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், இந்த மாவை அடைகளாக ஊற்றி முன்னும் பின்னும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சத்தான தினை கம்பு அடை தயார்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக