Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 29 நவம்பர், 2019

ஏமாளி ஆவது யார் தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

கலக்கலான ஜோக்ஸ் !!

வங்கி அதிகாரி : ஏப்பா, மாடு வாங்கணும்-னு லோன் வாங்குறியே கரெக்டா கட்டுவியா?
செந்தில் : என்ன சார் நீங்க. கட்டலைன்னா ஓடிடாத? நிச்சயமா கட்டி வைப்பேன் சார்.
வங்கி அதிகாரி : 😠😠
-------------------------------------------------------------------------------------------------------------
குணா : என் தாத்தா சுதந்திரத்திற்காக கடுமையாக போராடினார்.
சேகர் : அடடே... அப்படியா பரவாயில்லயே..!
குணா : ஆமா. ஆனா கடைசி வரை என் பாட்டி தரவே இல்லை.
சேகர் : 😂😂
-------------------------------------------------------------------------------------------------------------
கவுண்டமணி : உனக்கு ஏதுடா இந்த 2000 ரூபாய். திருடினியா?
செந்தில் : சேச்சே... நான் பாட்டு ஒன்னு பாடுனேன். அதுக்கு 500 ரூபாய் கொடுத்தாங்க.
கவுண்டமணி : அப்போ இந்த மீதி 1500 ரூபாய் எப்படிடா?
செந்தில் : நா பாடுறதையே விட்டுடணும்ன்னு கொடுத்தாங்க.
கவுண்டமணி : 😬😬
-------------------------------------------------------------------------------------------------------------

தத்துவக் கதைகள் !!
ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லி தந்த குருநாதரின்மேல் சீடனுக்கு கோபம்.

தன் நேரம் வீணாகிறதே என வருந்தினான் சீடன். கூண்டில் அடைக்கப்பட்ட பத்து கோழிகளை திறந்து விட்ட குருநாதர் பத்தையும் பிடிக்கச் சொன்னார்.

பத்தும் பத்து திசைகளில் ஓடின. துரத்தித் துரத்திக் களைத்தான் சீடன்.

கழுத்தில் சிவப்பு நாடா கட்டப்பட்ட கோழியை மட்டும் பிடிக்கச் சொன்னார் குருநாதர்.

சீடன் சில நிமிடங்களிலேயே அந்த கோழியை பிடித்தான். அப்போது குருநாதர் சொன்னார்.

'ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்று,
பலவற்றையும் பிடிக்க நினைத்தால்
எல்லாவற்றையும் இழந்து நிற்பாய்"!! நீ ஏமாளி ஆகிவிடாதே !!
-------------------------------------------------------------------------------------------------------------

இரக்கமும், உறக்கமும் ஒன்றுதான்
இரண்டையுமே அளவோடுதான் பயன்படுத்த வேண்டும்...!!

அதிகம் உறங்குபவன்
சோம்பேறி ஆகிறான்.
அதிகம் இரக்கம் காட்டுகிறவன்
ஏமாளி ஆகிறான் !!!

ஒருவரையொருவர் அன்பினால் தாங்குங்கள்...!!
கோபம், வெறுப்பு, கௌரவம், போட்டியென
இல்லாமல் ஒவ்வொருவரையும் தட்டிக்கொடுத்தும்,
விட்டுக்கொடுத்தும் வாழ்ந்து பாருங்களேன்...
வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
முயற்சித்துப் பாருங்களேன்...!!

-------------------------------------------------------------------------------------------------------------

குறளும்... பொருளும்...!!
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

பொருள் :

விருப்பு, வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக