Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 29 நவம்பர், 2019

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!


Image result for சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். எதிலும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள். எடுக்கும் காரியத்தை சாமர்த்தியமாக செய்து முடிக்கும் திறமையுடையவர்கள். நேர்மையானவர்கள். எதையும் மறைத்து பேசாதவர்கள்.
சித்திரை மாதத்தில் பிறந்தவர்களிடம் தான் என்ற அகந்தை அதிகமாக இருக்கும். இவரை நம்பி மற்றவர்கள் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். எதற்கும் கலங்காத மனம் படைத்தவர்கள். தனிமையை விரும்புபவர்கள். மற்றவர்களுக்காக தன்னுடைய கொள்கைகளை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். சோம்பல் என்பது இவர்களுக்கு பிடிக்காத ஒன்று.
 சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், இயல்பாகவே எந்த ஒரு காரியத்தையும் தாமதிக்காமல் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் பெண்கள் மூலமாக அதிக ஆதாயம் அடைவார்கள். திட்டம் போட்டு குடும்பத்தை நடத்துவதில் வல்லவர்கள். இவர்களை நம்பி எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும்.
 இந்த மாதத்தில் பிறந்தவர்கள் உல்லாசப் பயணங்கள் செல்வதில் அதிகம் விருப்பம் உடையவர்கள். பயணத்தின் மூலம் பல்வேறு வகையான அனுபவங்களை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் பெருமளவில் இருக்கும். இவர்களின் கையில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
 இவர்கள் இடம், பொருள், ஏவல் அறிந்து நடந்து கொள்வார்கள். இவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் பிரகாசிக்கும் யோகம் கொண்டவர்கள். இவர்கள் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் எதையும் செய்து முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.
 இவர்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள். தோல்வி வரும் நேரத்தில் துவண்டு போகாமல் வெற்றி பெறும் வரை கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். அரசியல், அதிகாரப் பதவிகள் மூலமாக செல்வம் சேர்த்து, அதன்மூலம் சொத்துகள் வாங்கும் யோகம் உடையவர்கள்.
 சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும், எந்த பொறுப்பு வகித்தாலும் அந்தத் துறையில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு அதிகாரப் பதவி, அந்தஸ்துள்ள பதவி, அரசியல் தலைமை போன்றவற்றில் உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் கிடைக்கும்.
 சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் நினைத்த காரியத்தை சாதிக்காமல் விட மாட்டார்கள். இவர்கள் வேலை செய்யும் துறையில் சிறப்பாக இருப்பதால், பலரது பகையை சந்திப்பார்கள். இவர்கள் மிக அதிகமாக கோபப்படுவார்கள். இவர்கள் கோபத்தை கட்டுப்படுத்தினால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
 இவர்களுக்குள் பல திறமைகள் இருந்தாலும், மனதிற்கு தன்னை ஒரு கோழையாக எண்ணிக் கொள்ளும் குணம் கொண்டிருப்பார்கள். இந்த எண்ணத்தையும், கோபத்தையும் சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் மாற்றிக் கொண்டால் வாழ்வில் வெற்றிகள் பல வந்து சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக