இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இனிப்பு
என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் சிறுவர்கள் முதல்
முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இனிப்பு வகைகளில் ஒன்றான கடலை மிட்டாயை
வீட்டில் எளிமையாக தயாரித்து, எவ்வாறு விற்பனை செய்வது? பற்றி இன்று காண்போம்.
தேவையான பொருட்கள் :
1.
நிலக்கடலை
2.
வெல்லம்
தயாரிக்கும் முறை :
கடலை மிட்டாய் செய்வதற்கு முதலில் நிலக்கடலையை
இதமான சூட்டில் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்தக் கடலையை இரண்டாக உடைக்க
வேண்டும். அதன் பிறகு உடைத்த கடலையில் உள்ள குருணையை நீக்க வேண்டும்.
வெள்ளத்தை
அடுப்பில் வைத்து, பாகு வரும் வரை காய்ச்ச வேண்டும். காய்ச்சி வைத்த பாகுவில் உள்ள
கசடு எல்லாவற்றையும் வடிகட்டி, சிறிது நேரம் பாகுவை ஆற வைக்க வேண்டும்.
பாகு ஆறியதும் அதனுடன் தேவையான அளவு உடைத்த
கடலையை சேர்த்து நன்கு பாகுடன் ஒட்டும் வரை கலக்க வேண்டும்.
பின்பு மட்டப்படுத்துவதற்காக பாகுடன்
கலக்கப்பட்ட கடலையை, அரிசி மாவு தடவிய மர அச்சு பலகையில் கொட்டி, கனமான இரும்பு
உருளை கொண்டு கடலைமிட்டாய் கலவையை சமப்படுத்த வேண்டும்.
கடலை
மிட்டாய் சரியான பதத்திற்கு வந்தவுடன் கத்தியைக் கொண்டு சரியான அளவில் சதுரம்
சதுரமாக வெட்டி பேக்கிங் செய்ய வேண்டும்.
விற்பனை :
இதனை
கடைகளில் விற்பனை செய்வதன் மூலம் நமக்கு தேவையான அளவு லாபம் பெற முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக