இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஜோதிடத்தின்
படி 2020 உங்கள் ஆரோக்கியம் எப்படி இருக்கப் போகிறது பார்க்கலாம்.
மேஷம்
மேஷ
ராசிக்காரர்கள் 2020 ஆம் ஆண்டு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று கவனமாக இருக்க
வேண்டும். ஏனெனில் ஆண்டின் ஆரம்ப காலத்தில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.
எனவே ஆரம்ப மாத காலத்தில் அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக ஆரோக்கியத்தில்
சற்று கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கும். இந்த ராசிக்காரர்களைப்
பொறுத்தவரை ஃபிட்டாக இருக்க, இவர்கள் உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை
அன்றாடம் செய்ய வேண்டும்.
ரிஷபம்
ரிஷப
ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, 2020 ஆம் ஆண்டு ஆரோக்கியமானது ஒரு கலவையாகவே
இருக்கும். இந்த ராசிக்காரர்களின் உடல்நலம் சற்று பாதிக்கப்படும். இருப்பினும்
பெரிய பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது என்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்த
ராசிக்காரர்கள் அவ்வப்போது மருத்துவரை சந்திக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மார்ச்
முதல் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த
நேரத்தில் இந்த ராசிக்காரர்கள் மனரீதியாக வலுவாக இருப்பார்கள்.
மிதுனம்
மிதுன
ராசிக்காரர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வருடத்தின்
ஆரைம்ப மாதங்களில் பெரிய பிரச்சனைகள் ஏதும் இருக்காது. ஆனால் வருடத்தின் மையப்
பகுதியில் உடல்நலத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். திடீரென்று சில நோய்கள் உங்களைத்
தாக்கி உடல் மற்றும் மன ரீதியாக பாதித்து தொந்தரவு செய்யலாம். இந்த
காலக்கட்டத்தில் உணவு மற்றும் பானத்தில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக
வெளியே சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது.
கடகம்
கடக
ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் எதுவும் வராவிட்டாலும், இவர்கள்
ஆரோக்கியமான உணவு மற்றும் பானங்களை பருகுவதுடன், உடற்பயிற்சிகளையும் அன்றாடம்
மேற்கொள்ள வேண்டும். மேலும் இவர்களுக்கு சிறு உடல் உபாதைகளை எதிர்கொண்டாலும்,
அதைப் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, தங்களை நன்கு கவனித்துக் கொள்ள
வேண்டும். மார்ச் முதல் ஜூலை மாதம் வரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க
வேண்டியிருக்கும். இக்காலத்தில் அலட்சியமாக இருப்பதை தவிர்க்கவும். முக்கியமாக
இந்த காலக்கட்டத்தில் டைபாய்டு அல்லது ஏதேனும் சரும நோய்களால் அவஸ்தைப்பட
வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம
ராசிக்காரர்களுக்கு 2020 ஆம் ஆண்டு மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் ஃபிட்டாக
இருப்பதற்கு சீரான உணவுகளுன் உடற்பயிற்சிகளையும் அன்றாடம் மேற்கொள்வீர்கள். இந்த
ஆண்டில் நீங்கள் ஜிம் செல்ல ஆரம்பிக்கலாம். ஆனால் இந்த ஆண்டின் நடுப்பகுதியில்
சிறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். இந்த காலத்தில் அதிகளவு மன அழுத்தம்
கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள்
மன அழுத்தம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி
ராசிக்காரர்கள் 2020 ஆம் ஆண்டை முழு உற்சாகத்துடன் தொடங்குவார்கள். இந்த வருடம்
இவர்களது ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த காலத்தில் இதுவரை நீங்கள்
அவஸ்தைப்பட்டு வந்த நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபடலாம். இந்த ராசிக்காரர்கள்
மன ரீதியாக வலுபெறுவதோடு, ஒவ்வொரு பணியையும் முழு பொறுப்புடன் முழுமையாக
முடிப்பார்கள். இவர்களின் ஆற்றல் மட்டம் சிறப்பாக இருப்பதன் மூலம், அனைத்து
பணியையும் வேகமாக முடிப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு யோகா மற்றும்
தியானத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம்
துலாம்
ராசிக்காரர்களுக்கு 2020 ஆம் ஆண்டு சிறப்பாக இல்லை. இருப்பினும், ஆண்டின் ஆரம்ப
காலத்தில் நன்றாக இருக்கும். கிரகங்களின் நல்ல நிலையினால் நோய்களை எதிர்த்து
போராடும் சக்தி இருக்கும். ஆனால் சிறு கவனக்குறைவுடன் இருந்தாலும், அது தீங்கை
விளைவிக்கும். ஆண்டின் மையப்பகுதியில் சரும நோய்கள், தசை வலிகள், செரிமான
பிரச்சனைகள் போன்ற சிறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக
ராசிக்காரர்களுக்கு 2020 ஆம் ஆண்டு இயல்பை விட சற்று சிறப்பாக இருக்கும். இந்த
வருடத்தில் எந்த ஒரு பெரிய பிரச்சனையையும் எதிர்கொள்ளமாட்டீர்கள். ஆண்டின் ஆரம்ப
காலத்தில் சிறு பிரச்சனைகளை சந்தித்தாலும், அதன் பின் ஆரோக்கியத்தில்
முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இந்த ராசிக்காரர்கள் தினமும் யோகா, தியானம் என
ஃபிட்டாக இருக்க அன்றாட வழக்கத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஆண்டின்
மையப்பகுதியில், மன ரீதியாக பாதிக்கப்படுவீர்கள். ஆனால் வலிமையான தன்னம்பிக்கை
மற்றும் தைரியத்தால், அனைத்து சவால்களையும் நீங்கள் உறுதியாக எதிர்கொள்வீர்கள்.
தனுசு
தனுசு
ராசிக்காரர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஆரோக்கியம் சூப்பராக இருக்கும். சிறு
பிரச்சனைகளை தள்ளி வைத்தால், இந்த வருடம் உங்களின் ஆரோக்கியம் மிகவும் அற்புதமாக
இருக்கும். இந்த வருடம் உடல் மற்றும் மன ரீதியாக வலுவாக இருப்பீர்கள். மேலும் இந்த
ராசிக்காரர்கள் ஆற்றலுடனும், மிகவும் உற்சாகமாகவும் அனைத்து பணிகளையும்
முடிப்பார்கள். ஆண்டின் மையப்பகுதியில், சிறு வேலைப்பளு இருக்கும். ஆனால் அதை
சமநிலையில் பராமரிப்பீர்கள். இந்த வருடம் உங்கள் லட்சியத்தை அடைய கடினமாக
உழைப்பீர்கள். ஆனால் அதே சமயம் உங்களையும் கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும்
என்பதை மறவாதீர்கள்.
மகரம்
2020
ஆம் ஆண்டைப் பொறுத்தவரை மகர ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
நீண்ட காலமாக ஒரு நோயால் போராடிக் கொண்டிருந்தால், இந்த வருடம் அந்த நோயில்
இருந்து விடுபடலாம். இருப்பினும், ஆண்டின் ஆரம்ப காலத்தில் கடினமாக உழைக்க
வேண்டியிருப்பதால், நீங்கள் உடல் ரீதியாக சற்று பலவீனமாகலாம். அந்த சூழ்நிலையில்,
வேலையுடன் ஓய்வெடுப்பத்திலும் கவனத்தை செலுத்த வேண்டும். ஆனால் மார்ச் மாதத்திற்கு
பிறகு உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப
ராசிக்காரர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்காது.
இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.
குறிப்பாக மே மாதத்திற்கு பின் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
இக்காலத்தில், மன அழுத்தம் அதிகரித்து, அதனாலும் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். இந்த
காலத்தில் நீங்கள் கண்கள், வயிறு அல்லது தூக்கமின்மை பிரச்சனையால்
அவஸ்தைப்பட்டால், அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லாவிட்டால், அது தீவிரமான
வடிவத்தை எடுக்கக்கூடும். எனவே இந்த வருடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
மீனம்
மீன
ராசிக்காரர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த வருடத்தில்
தீவிரமான பிரச்சனைகள் எதுவும் வராது. இருப்பினும் அலட்சியமாக எதையும்
எடுக்காதீர்கள். மே முதல் செப்டம்பர் வரையிலான காலங்கள் மிகவும் கடினமாக
இருக்கும். இக்காலத்தில் அதிகப்படியாக வேலைப்பளு மற்றும் மன கவலை காரணமாக மிகவும்
வருத்தப்படுவீர்கள். இந்த காலத்தில், நீங்கள் உங்களை கூடுதலாக கவனித்துக் கொள்ள
வேண்டும். முக்கியமாக இந்த காலத்தில் கடவுளை மனதார வணங்குங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக