இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்த ஆலயம் மூர்த்தி, ஸ்தலம்,
தீர்த்தம், தவம், தியானம் ஆகிய ஐம்பெரும் சிறப்புகளை உடையது. முருகப்பெருமானின் 16
வடிவங்களை பற்றி கூறும் கந்த புராணத்தில் முதன்மையான ஞானசக்தி வடிவமாக கையில்
வேலுடன் மயில் வாகனத்தில் தோரணமலையில் எழுந்தருளி உள்ளான் கந்தன்.
தோரணமலை
சிறப்பு :
வாரணமலை என்பது காலப்போக்கில் தோரணமலை
என மருவி வழங்கப்படுகிறது. வாரணம் என்பதற்கு யானை என்று பொருள். யானை
முன்னங்கால்களை மடக்கி படுத்திருப்பது போன்று அமைந்துள்ளது. 20 கிலோ மீட்டர்
தொலையில் இருந்து காண்போருக்கும் தரிசனம் தரும் வகையில் அமைந்துள்ளது தோரணமலை.
வேறெங்கும் காண இயலாத சிறப்பாக 64
சுனைகள் இந்த மலையில் உள்ளன. இந்த ஸ்தலத்தில் இறைவன் விரும்பி உறைவதற்கு அங்குள்ள
புனித தீர்த்தங்கள் காரணமாக அமைகின்றன என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தோரணைமலையில்
தங்கிய அகத்தியர் :
அகத்தியரின் மருத்துவ திறனை
பயன்படுத்தி தேரையரின் சமயோசித புத்தியை வெளிப்படுத்தி சித்த மருத்துவத்தின்
சிறப்பை உலகறிய செய்ய முருகப்பெருமான் திருவிளையாடல் நடத்திய தலம் இது. அகத்தியர்
திருக்குற்றாலம் வந்தபோது அங்கு வைணவத்தலத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளிய
பெருமாளை இலஞ்சி குமாரசாமியின் அருளால் சிவபெருமானாக்கி வழிபட்டு பொதிகைமலை நோக்கி
வந்தார். வரும் வழியில் வானளாவ கநுவாகன அமைப்பில் உயர்ந்து நிற்கும் தோரணமலையின்
அழகில் மனம் மகிழ்ந்தார்.
சிறிது காலம் இம்மலையில் தங்கி தவம்
புரியவும், சித்த மருத்துவம் ஆராய்ச்சி செய்யவும் விரும்பினார். அப்பொழுது தன்
இஷ்ட தெய்வமான முருகப்பெருமானை மலைமீது தவமிருந்து வணங்கி வந்தார்.
மருத்துவ ஆராய்ச்சியில் அவருக்கு
உதவியாக அவ்வையாரின் பரிந்துரையின் பேரில் பிறவி ஊமையான ராமதேவன் எனும் அந்தணன்
சீடனாக இருந்து வந்தார். மருத்துவ ஆராய்ச்சியில் தனக்கு உதவியாகவும், சிகிச்சையில்
சமயோசிதமாகவும் செயல்பட்ட தன் சீடன் ராமதேவனை பாராட்டிய அகத்தியர் அவரை தேரையர்
என்று அழைக்க தொடங்கினார்.
சிறப்புகள்
:
மிகப்பழமையான இந்த தோரணமலையில் தற்போது
உள்ள முருகன் சிலையை சுனையில் இருந்து மீட்டெடுத்து சுமார் 400 ஆண்டுகளுக்கு
முன்பு பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளான் மதுரையை ஆண்ட வெங்கலநாயக்கன் என்னும்
மன்னன். சீதையை தேடிவந்த போது ராமபிரான் தோரணமலை வந்து முருகனை வழிபட்டதாக ஐதீகம்.
அடிவாரத்தில் இருந்து சுமார் 926
படிகட்டுகள் கடந்து சென்றால் மலை உச்சியில் உள்ள முருகனை தரிசிக்கலாம்.
மலைப்பாதையின் நடுவில் சுயம்பு லிங்கத்தையும் தரிசிக்கலாம். அகத்தியருக்கு
சிவபெருமான் இங்கு காட்சி கொடுத்ததால் இந்த சுயம்பு லிங்கம் தொடங்கியாத ஐதீகம்.
பலன்
தரும் வழிபாடுகள்..
தோரணமலையில் ஒரு நாழிகை நேரம் தியானம்
செய்து முருகப்பெருமானை வழிபட்டால் உலகையே வெல்லும் ஞானம் கிடைக்கிறது.
எப்படிப்பட்ட நோயும் தானாகவே குணமடைகிறது.
திருமணம், மகப்பேறு
ஆகியவற்றுக்காகவும், நோய் குணமாகவும், சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும்
தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, தொழில்
அமையவும் உயர்பதவி கிடைக்கவும் அருள்பாலிக்கிறான்.
சிறப்பு
வழிபாட்டு நேரங்கள் :
செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய
நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும்.
மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
வல்லவ விநாயகர், குருபகவான், நவகிரகங்கள், சிவன், கிருஷ்ணர், பார்வதி, மகாலட்சுமி,
சரஸ்வதி, சப்தகன்னியர் ஆகியோரையும் அடிவாரத்தில் தரிசிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக