இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சிவா என்ற குட்டிப் பையன் ஒரு நாள்
அப்பாவோடு தோட்டத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினான். பார்க்கும் இடமெல்லாம் பச்சைப்
பசேல் என்று இருந்தது. ஏராளமான குருவிகளும், தும்பிகளும் இங்கும் அங்குமாகப்
பறந்து, பார்ப்பதற்கு மிகுதியான உற்சாகத்தை உண்டாக்கின.
அவர்களுடைய தோட்டத்தை சுற்றிலும் வேலி
அமைக்கப்பட்டு, ஒரு இடத்தில் கதவு வைக்கப்பட்டுப் பூட்டப்பட்டிருக்கும். அதைப்
பராமரிக்க பன்னீர் என்ற வேலையாள் ஒருவர் இருந்தார். அந்த வேலையாளின் வீடும்
தோட்டத்துக்கு அருகிலேயே இருந்தது. சாவி வாங்குவதற்காக இருவரும் அவர் வீட்டிற்கு
சென்றார்கள். தோட்டக்காரர் அவர்களை அன்போடு வரவேற்று வீட்டில் அமர வைத்தார். அவர்
வீட்டில் வான் கோழிகளும், முயல்களும், மாடுகளும் இருந்தன. சிவாவுக்கு
அவற்றையெல்லாம் பார்ப்பதில் ஒரு குதூகலம் வந்துவிட்டது. முயல்களைத் துரத்திக்
கொண்டு கொல்லைப் பக்கம் ஓடினான். அங்கு சிறிது நேரம் விளையாடிய பிறகு, அவன் ஒரு
விஷயத்தை கவனித்தான்.
அங்கிருந்த மாடுகள் கவணையில், ஒரு
நீளமில்லாத கயிற்றைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. மாடுகள் உள்ளே கொட்டப்பட்டிருந்த
புற்களை சிரமப்பட்டு உண்ணுவது போல் சிவாவுக்கு தோன்றியது. உடனே சிவா அந்த
வேலையாளிடம், ஏன் இந்த மாதிரி நெருக்கமா மாட்டைக் கட்டி வச்சிருக்கீங்களே, அதுங்க
பாவம் இல்லையா? உங்க தோட்டத்துலதான் இவ்வளோ புல் இருக்குதே. இங்கேயே ஒரு பெரிய
கயிறா எடுத்து ஒரு மரத்துல கட்டி வைக்கக்கூடாதா? அதுங்க புல்லை கொஞ்சம் சுலபமா
சாப்பிடுமே என்றான்.
அதற்கு அவர் சிரித்தபடி, தம்பிக்காக
ஒரு மாட்டை அப்படியே கட்டி வைக்கிறேன். கொஞ்ச நேரம் என்னாகுதுன்னுதான் பார்ப்போமே
என்று சொல்லியபடி ஒரு மாட்டை மட்டும் அவிழ்த்துக் கொல்லையில் இருந்த மரத்தில், ஒரு
நீளமான கயிற்றில் கட்டி வைத்தார். அதற்கு சிவாவின் அப்பா உடனே, என்ன பன்னீர்,
சின்னப் பையன் ஏதோ சொல்றான்னுட்டு நீங்களும் இப்படி செய்றீங்களே என்றார். அதற்கு
பன்னீரும், இருக்கட்டும் சார். சின்னப்புள்ள, ஏதோ ஆசைப்படுது. என்னதான் ஆகுதுன்னு
பார்க்கட்டுமே என்றார்.
பிறகு அவர்கள் அனைவரும் தோப்புக்குப்
போய் இளநீரெல்லாம் குடித்துவிட்டு, ஒருமணி நேரம் கழித்து வந்தனர். பிறகு பன்னீரின்
வீட்டுக்கு வந்தவுடனேயே சிவா கொல்லைப் புறத்திற்கு ஓடினான். அங்கே மாடு இருந்த
கோலம் அவனை அதிர வைத்து விட்டது. மாடு புல்மேயும் ஆர்வத்தில் கயிற்றுடன் மரத்தையே
சுற்றிச்சுற்றி வந்து கயிறு முழுவதும் மரத்தில் சுற்றிக் கொண்டுவிட்டது.
இப்போது அடுத்த அடி கூட எடுத்து வைக்க
முடியாமல், மூச்சுத் திணறியபடி தவித்துக்கொண்டிருந்தது. இப்போது பன்னீர்
சிவாவிடம், கயிறு ரொம்ப நீளமா இருந்தா இதுங்க இப்படித்தான் கண்ணு பண்ணும். சில
நேரத்துல உயிருக்கே கூட ஆபத்தாயிடும் என்று சொல்லிக் கொண்டே மாட்டை அவிழ்த்துக்
பழையபடி கட்டினார். சின்னக் கயிற்றில் கட்டப்பட்டு இருப்பது சிறையல்ல, அது
மாடுகளுக்கு பாதுகாப்பு தான் என்பது சிவாவுக்கு அப்போது புரிந்தது. பெரியதொரு
விஷயத்தைத் தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் அப்பாவுடன் உற்சாகமாய் வீடு
திரும்பினான்.
நீதி
:
சில நேரங்களில் அதிகபட்சமான சுதந்திரம் ஆபத்தில்
முடிவதுண்டு. சில நியதிகளும், கட்டுப்பாடுகளும் நம்மைக் காத்துக் கொள்ளவே
ஏற்படுத்தப்பட்டவை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக