இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திருநெல்வேலியில்
இருந்து ஏறத்தாழ 51கி.மீ தொலைவிலும், கல்லிடைக்குறிச்சியில் இருந்து ஏறத்தாழ
9கி.மீ தொலைவிலும், குற்றாலத்தில் இருந்து ஏறத்தாழ 43கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள
பெரிய அணைதான் மணிமுத்தாறு அணை.
தாமிரபரணி
ஆற்றின் கிளை ஆறாக இருப்பது மணிமுத்தாறு. அதன் குறுக்கே மணிமுத்தாறு அணை
கட்டப்பட்டுள்ளது.
மணிமுத்தாறு
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கல்லிடைக்குறிச்சி-அம்பாசமுத்திரம் இடையே,
தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.
மேற்குத்
தொடர்ச்சி மலையில் களக்காடு பகுதியில் செங்கல்தேரி அருகே பச்சையாற்றின்
பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு
அணைக்கட்டில் வந்து விழுகிறது.
மழைக்காலத்தில்
பெருவெள்ளமாக இது பாய்கிறது. பல பகுதிகளுக்குக் குடிநீர் ஆதாரமாக இந்த அணை உள்ளது.
மணிமுத்தாறு
அணைக்கட்டு மற்றும் அருவி ஆகியவை சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகின்றன.
பெரிய
மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை,
கோழிப்பண்ணை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன.
மலையின்
மீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
சென்று மகிழ்ச்சியாக இருக்க ஏற்ற இடம்.
எப்படி செல்வது?
திருநெல்வேலிக்கு
அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
திருநெல்வேலியில்
பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத் தலங்கள் :
மணிமுத்தாறு
அருவி.
குற்றாலம்.
அகஸ்தியர்
அருவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக