Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 29 நவம்பர், 2019

காலண்டரில் மேல்நோக்கு கீழ்நோக்கு சமநோக்கு நாள் என குறிப்பிடப்பட்டிருக்கும் அப்படி என்றால் என்ன தெரியுமா....?

Kil nookum Naal 




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

மேல்நோக்கு நாள்: உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல் நட்சத்திரங்களாகும்.

இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல் நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது.
உதாரணத்திற்கு கட்டிடம் எழுப்புவது மரங்களை நடுவது, மேல்நோக்கி வளரக்கூடிய விதைகளை விதைப்பது போன்றவற்றை செய்யலாம்.
 கீழ்நோக்குநாள்: கிருத்திகை, பரணி, பூரம், ஆயில்யம், விசாகம், மகம், மூலம் பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்களாகும். இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது நல்லது.
 உதாரணத்திற்கு கிணறு தோண்ட ஆரம்பிப்பது, வீட்டில் போர்வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக்கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
 சமநோக்கு நாள்: அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிருகசீரிஷம், ஸ்வாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது.
 உதாரணமாக சாலை அமைப்பது, சாலையில் ஓட்டக்கூடிய வாகனங்கள் வாங்குவது, வீட்டிற்கு தளம் அமைப்பது, போன்றவற்றை செய்யலாம்.  இப்படியாக நாட்கள் பார்த்து அந்தந்த வேலைகளை செய்தால் அது சிறப்பாக முடியும் என்பது ஐதீகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக