சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
நோயாளி : டாக்டர் நாய் கடிச்சிருச்சு..
டாக்டர் : அதுதான் வாயில்லா பிராணியாச்சே..
நோயாளி : டாக்டர் நாய் கடிச்ச வலியைவிட... நீங்க கடிச்ச வலி பயங்கரமா இருக்கு...
டாக்டர் : 😏😏
-------------------------------------------------------------------------------------------
அமைச்சர் : யாருக்கும் சந்தேகம் வராதவாறு மன்னரைத் தீர்த்துக் கட்ட வேண்டும்... என்ன செய்யலாம் புலவரே?
புலவர் : நான் வேண்டுமானால் மன்னரின் முன்னால் பாடட்டுமா?
அமைச்சர் : 😂😂
-------------------------------------------------------------------------------------------
நீதிபதி : இது வரைக்கும் 5 ATM மெஷின ஒடச்சி பணம் எடுத்துருக்க... உன்னோட தப்பை ஒத்துக்கிறியா?
திருடன் : ஆமா ஐயா.. ஒத்துக்கிறேன்.!!
நீதிபதி : இதுக்கு என்ன தண்டனை-ன்னு உனக்கு தெரியுமா?
திருடன் : என்னய்யா இது தெரியாதா...? நேத்துதான சொன்னாங்க ATMல நாலு தடவைக்கு மேல பணம் எடுத்தா 150 வசூல் பண்ணுவாங்க-ன்னு..!!
நீதிபதி : 😩😩
-------------------------------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
உயர்வான எண்ணம்...
விரிவான சிந்தனை...
நேர்மையான செயல்பாடு...
உங்களிடம் இருந்தால்,
உங்களை யாராலும் வீழ்த்த முடியாது..
-------------------------------------------------------------------------------------------
யார் சிரிப்பார்? யார் அழுவார்?...
நாம் வாழும்போது யாரை சிரிக்க வைக்கிறோமோ,
அவர்கள்தான் நாம் இறக்கும்போது அழுகிறார்கள்...
நாம் வாழும்போது யாரை அழ வைக்கிறோமோ,
அவர்கள்தான் நாம் இறக்கும்போது சிரிக்கிறார்கள்...
-------------------------------------------------------------------------------------------
காயங்களும்... சிரிப்பும்...!!
காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல...
அப்படி சிரிக்க பழகிக்கொண்டால்
எந்த காயமும் அவ்வளவு பெரிதல்ல...
வலிகளும்... வழிகளும்...!!
வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்...
வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்...
அர்த்தங்கள் ஆயிரம் உண்டு...
வலிகளை சுமந்து வழிகளை தேடும்
பயணம்தான் வாழ்க்கை...
-------------------------------------------------------------------------------------------
பொன்மொழிகள்...!!
உன் மனம் வலிக்கும்போது சிரி...
பிறம் மனம் வலிக்கும்போது சிரிக்க வை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக