Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 மார்ச், 2020

சத்தமின்றி பேஸ்புக்கில் அறிமுகமான புதிய அம்சம்; உடனே செக் பண்ணுங்க!

Facebook new desktop design
பேஸ்புக் நிறுவனம் ஒருவழியாக அதன் டெஸ்க்டாப் பயனர்களுக்கு டார்க் மோட் பயன்முறையைத் தேர்வு செய்வதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. இது சார்ந்த அறிவிப்பில் பேஸ்புக் நிறுவனம், "இன்று முதல், பேஸ்புக்கில் பெரும்பான்மையானவர்கள் புதிய டெஸ்க்டாப் வடிவமைப்பை அணுக முடியும்" என்று கூறியுள்ளது.

இந்த புதிய வடிவமைப்பில் மிகவும் பிரபலாமான டார்க் மோட் பயன்முறையும் அடக்கம், இது செட்டிங்ஸ்-இந்த கீழ்தோன்றும் மெனு வழியாக இயக்கப்படலாம் மற்றும் முடக்கப்படலாம் என்றும் பேஸ்புக் கூறியுள்ளது.

பேஸ்புக் டெஸ்க்டாப் டார்க் மோட் அம்சமானது நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த வசந்த காலத்தில் நடந்த அதன் எஃப் 8 டெவலப்பர்கள் மாநாட்டில் பேஸ்புக் நிறுவனம், அதன் தூய்மையான மற்றும் வேகமான டெஸ்க்டாப் இன்டர்பேசை உறுதியளித்தது. குறைந்த எண்ணிக்கையிலான பயனர்கள் ஜனவரி மாதத்தில் இந்த புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பை சோதிக்கத் தொடங்கினர்.

இந்த அப்டேட் உங்களுக்கு கிடைத்தால், நீங்கள் பேஸ்புக்கின் டெஸ்க்டாப் பதிப்பைப் பயன்படுத்தினால், பக்கத்தின் மேலே ஒரு பேனரைக் காணலாம், அது நீங்கள் "புதிய பேஸ்புக்" ஐ முயற்சிக்க விரும்புகிறீர்களா என்று கேட்கலாம். நீங்கள் அதை தேர்வு செய்தால் "கிளாசிக் பேஸ்புக்" க்கு மாறலாம். ஆனால் இந்த பேஸ்புக் மறுவடிவமைப்பு ஆனது இந்த ஆண்டின் பிற்பகுதியில் தான் டீபால்ட் ஆக மாறும்.

இதில் பேஸ்புக் வாட்ச், மார்க்கெட் பிளேஸ், க்ரூப்ஸ் மற்றும் கேமிங் ஆகியவைகளுக்கென்றே மையப்படுத்தப்பட்ட டேப்கள் போன்ற பிற மாற்றங்களையும் காண முடிகிறது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இடைமுகத்தின் அனைத்து அம்சங்களையும் பயனர்கள் விரும்பாவிட்டாலும், இதன் டார்க் மோட் யன்முறை நிச்சயம் பிரபலம் அடையும்.



இது ஏற்கனவே மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட பல பேஸ்புக்கிற்கு சொந்தமான பயன்பாடுகளில் கிடைக்கிறது. கூடுதலாக, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பயனர்கள் அதிக பேஸ்புக்கை பயன்படுத்த வாய்ப்புள்ளது, மற்றும் அதன் வழியாக புதிய மேம்பாடுகளை அவர்கள் அணுகுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். தவிர டார்க் மோட் வழக்கம் போல கண்களுக்கு சிரமத்தை வழங்காமல் அதிக நேரம் பேஸ்புக்கை பயன்படுத்த வைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக