கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை, ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதோ ஒரு மூலையில் அதிகரித்துக் கொண்டே
இருக்கிறது.
இன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி,
கொரோனா வைரஸ் குறித்தும், இந்த வைரஸால் இந்தியாவின் நடுத்தர மற்றும் ஏழை மக்கள்
பாதிக்கப்படுவதாகவும் சொன்னார்,
அதோடு பொருளாதாரமும்
பாதிக்கப்படுவதாகச் சொல்லி இருக்கிறார். எனவே, பொருளாதாரத்தை மேம்படுத்த நிதி
அமைச்சர் தலைமையில் ஒரு கோவிட் 19 பொருளாதார டாஸ்க் ஃபோர்ஸ் அமைத்து இருக்கிறார்.
கனடா
இத்தனையும் செய்த பிரதமர், கனடா
நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவைப் போல, பல அதிரடி திட்டங்களை அறிவிப்பாரா?
கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வருவதால், கனடாவில் சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு
3 மாத ஊதிய மானியத்தை கனடா அரசு வழங்கும். இந்த மானியத்தைக் கொண்டு, ஊழியர்களுக்கு
சிறு குறு நிறுவனங்களை நடத்துபவர்கள் சம்பளம் கொடுக்கலாம். எனவே வேலை இழப்பை
பெருவாரியாக இது தடுத்துவிடும்.
14
வாரங்களுக்கு உதவி
வேலை செய்யும் ஊழியர்களுக்கு
இன்சூரன்ஸ் இல்லையா, உடல் நலக் குறைவுக்கு விடுப்பு எடுக்க முடியாதா, கொரோனா
பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினரை பார்த்துக் கொள்ள வேண்டுமா... கனடா அரசின் Emergency
Care Benefit திட்டத்தில் இருந்து 14 வாரங்களுக்கு உதவி கிடைக்கும் எனச் சொல்லி
இருக்கிறார். இப்படி பல அதிரடி திட்டங்களைக் கொண்டு வந்து இருக்கிறார் கனடா
பிரதமர்.
100
நாள் வேலை வாய்ப்பு
இந்தியாவிலும், இது போல நலத்
திட்டங்களை அறிவிக்க முடியும் என்றேஎ தோன்றுகிறது. ஏற்கனவே இந்தியாவில் மக்களை
அதிகம் சென்று சேர்ந்த 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் படு பிரபலமானது. இந்த
அரசு திட்டத்தில் பயன் பெறும், கடைக் கோடி இந்தியர்களின் வங்கிக் கணக்குகளில்,
கொஞ்சம் பணத்தை போட்டு விட்டால், அவர்கள் பிழைத்துக் கொள்ள வசதியாக இருக்குமே.
விவசாயிகள்
அதே போல பிரதான் மந்திரி கிஷான் சம்மன்
நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் கொடுக்க இருப்பதாக மத்திய அரசு
சொல்லி இருக்கிறது. இந்த 6000 ரூபாய் பணத்தை திட்டத்தின் படி 3 தவணையாக
கொடுக்காமல், ஒரே தவணையாக 6,000 ரூபாயோ அல்லது ஒரே தவணையில் மீதம் இருக்கும் மொத்த
பணத்தையோ போட்டால், விவசாயிகள் தங்கள் அடிப்படை தேவையை பூர்த்தி செய்து கொள்ள
உதவியாக இருக்குமே..! இதை எல்லாம் அரசு கொஞ்சம் யோசித்து செய்தால் நன்றாக
இருக்கும். செய்வார்கள் என நம்புவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக