Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

ஞாபகமறதி... நீங்கள் எப்படி? படிச்சு பாருங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்க மட்டுமே...!!
டாக்டர் : உங்களோட நாடி துடிப்பு கடிகாரம் மாதிரியே ஒரே சீரா இருக்கு...
நோயாளி : நீங்க இப்போ புடிச்சு பாத்துக்கிட்டு இருக்குறது என்னோட கடிகாரத்ததான் டாக்டர்...
டாக்டர் : 😨😨
---------------------------------------------------------------------
பாபு : ஏன் சார் படிக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கிறீங்க?
குமார் : சும்மா இருங்க சார், பரீட்சைக்கு கூட போகாம படிச்சுக்கிட்டே இருக்கான்!!
பாபு : 😂😂
---------------------------------------------------------------------
ராம் : உங்க குடும்பம் ஒரு கோவிலா, அவ்வளவு மரியாதை இருக்குமா?
சீனு : ஆமா! எப்போ போனாலும் கண்டிப்பா அர்ச்சனை இருக்கும்.
ராம் : 😳😳
---------------------------------------------------------------------
இன்ஸ்பெக்டர் : வண்டிக்கு லைசென்ஸ் இருக்கா?
சோமு : இருக்கு சார்!
இன்ஸ்பெக்டர் : ஆர்.சி புக்?
சோமு : இருக்கு சார்!
இன்ஸ்பெக்டர் : அப்போ ஏன் வண்டிய நிறுத்தாம போன?
சோமு : பிரேக் இல்ல சார்!
இன்ஸ்பெக்டர் : 😂😂
---------------------------------------------------------------------
மனிதன்...!!
சக மனிதனை சமமாக மதிக்காத வரை நீங்கள் மனிதராக முடியாது...
எவரும் எவரைவிட இங்கு
உயர்ந்தவரும் இல்லை...
தாழ்ந்தவரும் இல்லை...
---------------------------------------------------------------------
அட அப்படியா?
ஞாபக மறதியில் அவஸ்தை படுபவர்களை விட,
மறக்க வேண்டியதை ஞாபகம் வைத்து
அவஸ்தை படுபவர்கள்தான் அதிகம்...
---------------------------------------------------------------------
விடுகதைகள்...!!
1. கந்தல் துணி கட்டியவன், முத்து பிள்ளைகளை பெற்று மகிழ்ந்தான். அது என்ன?

2. கடல் நீரில் வளர்ந்து, மழை நீரில் மடியும். அது என்ன?

3. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்து அல்ல. அது என்ன?

4. காலையிலும், மாலையிலும் நெட்டை. மதியம் குட்டை. அது என்ன?

விடைகள் :

1. சோளக்கதிர்.

2. உப்பு.

3. கடல்.

4. நிழல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக