Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 ஏப்ரல், 2020

நட்சத்திரங்களிடையே தோன்றிய விசித்திரமான ஒளி.! நாசா கூறிய உண்மை என்ன தெரியுமா?

வானத்தில் தோன்றிய விசித்திரமான ஒளி

உலக மக்கள் அனைவரும் கொரோனா பீதியில் இருக்கும் போது, இங்கிலாந்தில் உள்ள மக்கள் நட்சத்திரங்களிடையே தோன்றிய 'விசித்திரமான ஒளி'யை கண்டு பீதியில் திக்குமுக்காடிப் போயுள்ளனர். எப்போதும்போல, இது ஏலியனின் வருகை, வேற்றுகிரகவாசிகள் பூமிக்குள் வந்துவிட்டார்கள் என்று சிலர் கிளப்பிவிட்ட துவங்கிவிட்டனர். உண்மையில் இந்த நட்சத்திரங்களிடையே தோன்றிய 'விசித்திரமான ஒளி' என்ன தெரியுமா மக்களே? வாங்க சொல்கிறோம்.

வானத்தில் தோன்றிய விசித்திரமான ஒளி

கொரோனா செய்திகள் வலைத்தளங்களை நிரப்பி வரும் நேரத்தில் ஒரு விசித்திரமான செய்தியைக் கண்டோம், சனிக்கிழமை இரவு, மக்கள் நட்சத்திரங்களிடையே தோன்றிய ஒரு 'விசித்திரமான ஒளி' பற்றி the MEN பத்திரிகை கேள்விகளை எழுப்பியுள்ளனர். இரவு 9 மணியளவில் குறைந்தது 20 விந்தையான நகரும் நட்சத்திரம் போன்ற ஒளியை ஒரே நேர்கோட்டில் மக்கள் பார்த்துள்ளனர் என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

நகரும் விளக்குகள் ஆனால் நட்சத்திரங்கள் இல்லை

அதே நேரத்தில், மற்றொருவர் சர்வதேச விண்வெளி நிலையம் என் வீட்டின் மேல் வனத்தில் சென்றதை நான் பார்த்திருக்கிறேன் என்று கூறி, அந்த நேரத்தில் 26 விளக்குகள் ஒன்றின் பின் ஒன்றாகப் பின்தொடர்ந்ததை நான் கண்டேன் என்று குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். மற்றொருவர் 'இன்றிரவு ஏன் வானத்தில் உள்ள விளக்குகள் நகர்கின்றன? நான் நட்சத்திரங்களைக் குறிக்கவில்லை!' என்று குறிப்பிட்டிருந்தார்.

பூமியை நோட்டம் விட வந்த ஏலியனா?

இவர்கள் மட்டுமின்றி சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் இந்த விசித்திரமான ஒளியைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர். யாரும் கவலைப்பட வேண்டாம், இது வேற்றுகிரகவாசிகளின் வருகை இல்லை, பூமியை நோட்டம்விடவந்த ஏலியன் விண்கலமும் இது இல்லை என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்கிறோம். அப்படியானால் இந்த விசித்திரமான ஒளியின் பின்னணியில் உள்ள உண்மை என்ன

நாசா வலைத்தளம் கூறும் உண்மை

இதற்கான பதில் இந்த விசித்திரமான நகரும் ஒளிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் விளக்குகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா வலைத்தளத்தின்படி, சர்வதேச விண்வெளி நிலையம் விமானம் போல அல்லது மிகவும் பிரகாசமான ஒரு நட்சத்திரம் போல வானம் முழுவதும் நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஒளிரும் பிளாஷ் விளக்குகள் இல்லை, இவை திசையை மாற்றாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிலரின் கண்களில் சிக்கிவிடும் ISS

சர்வதேச விண்வெளி நிலையம் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியைச் சுற்றி வருகிறது. இருப்பினும் பெரும்பாலான நேரங்களில் இது எப்போதும் மக்கள் கண்களுக்கு அகப்படுவதில்லை. ஆனால், சில நேரங்களில் சிலரின் கண்களில் சிக்கிவிடுகிறது.

ஏப்ரல் 4 வரை தெரியும் ISS; என்ன நேரத்தில் பார்க்க முடியும்?

இந்த விசித்திரமான ஒளியை நீங்கள் தவறவிட்டிருந்தால், கவலைகொள்ள வேண்டாம்; ஏப்ரல் 4 சனிக்கிழமை வரை ஐ.எஸ்.எஸ் இரவு 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை வனத்தில் தெரியும் என்று நாசா தெரிவித்துள்ளது. ஊரடங்கில் பொழுது போகாதவர்கள் பருப்பு அரிசியை எண்ணுவதை நிறுத்திவிட்டு மாடிக்கு சென்று நட்சத்திரங்களுடன் முடிந்தால் இந்த நகரும் விளக்குகளையும் எண்ணிவிட்டு வாருங்கள்.

வினாடிக்கு ஐந்து மைல் வேகத்தில் பயணிக்கும் சர்வதேச விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையம் தற்போது வினாடிக்கு ஐந்து மைல் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இதில் மூன்று பேர் கொண்ட சர்வதேச விண்வெளிவீரர் குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். ஆறு படுக்கையறைகள் கொண்ட ஒரு பெரிய வீட்டை போல் இது பெரியது என்றும், இதில் ஒரு உடற்பயிற்சி கூடம் மற்றும் 360 டிகிரி வியூ பே விண்டோவையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக