ஆஸ்திரேலியா தற்போது Bacillus Calmette–Guerin (BCG) என்ற தடுப்பு மருந்தை 4000 சுகாதாரப் பணியாளர்களுக்கு கொடுத்து, இது கொரோனாவை தடுக்குமா என்று பரிசோதிக்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் முர்டோச் குழந்தைகள் நல மருத்துவமனை இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளது.
சர்வதேச நாடுகள் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந்த சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேல் காசநோய்க்கு Bacillus Calmette–Guerin (BCG) என்ற தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மெல்போர்னியாவில் இருக்கும் இந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் 130 மில்லியன் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த காச நோய் மருந்து செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பு மருந்து ஆரம்ப நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கிருமிகளை எதிர்கொள்ள வலுவுடன் செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்ற ஆராய்ச்சியில் நெதர்லாந்து, பிரிட்டன், ஜெர்மன் ஆகிய நாடுகளும் ஈடுபட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக