வியாழன், 2 ஏப்ரல், 2020

விந்து விரைவாக வெளியேறாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?


விந்து விரைவாக வெளியேறாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

சமீப காலங்களாக வலிமையிழந்த விந்தணுக்கள் மற்றும் விந்தணுக்கள் உற்பத்தியில் ஏற்படுகின்ற குறைபாடு, விந்து நீர்த்துப் போதல், உயிரணுக்கள் குறைவாக இருப்பது என பல பிரச்சினைகளை ஆண்கள் சந்திக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, விந்து மிக வுகமாக வெளியேறுதல் மிக முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது. அதை நம்முடைய அன்றாட உணவின் மூலம் எப்படி சரிசெய்யலா் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

உயிரணுக்கள் குறைபாடு

இன்றைய தலைமுறை இளைஞர்களின் வாழ்க்கை முறை என்பது மனிதத் தொடர்புகளைத் தாண்டி, கணினிக்குள்ளாகப் புதைந்து போய்விட்ட ஒன்றாக மாறிவிட்டது. ராத்திரி, பகல் என நேரம் காலம் பார்க்காமல் கம்யூட்டரின் முன்னால் உட்கார்ந்து, அதிக நேரம் செலவிடுவதும், நொறுக்குத் தீனி, பாஸ்ட் ஃபுட்ஸ் என கையில் கிடைக்கிற எதையாவது சாப்பிட்டு விட்டு, தங்களுடைய வாழ்க்கை முறையையே மாற்றி விட்டதால் ஏராளமான ஆரோக்கியக் குறைபாடுகள், ஹார்மோன் சமநிலையற்ற தன்மை ஆகிய பிரச்சினைகள் உண்டாகின்றன. இதுபோன்ற ஹார்மோன் குறைபாட்டு பிரச்சினையாலும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களும் சந்திக்கிற மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்றான இன்றைக்கு உயிரணுக்கள் உற்பத்திக் குறைபாடும், வலுவான விந்தணுக்கள் இல்லாமல், விரைவில் விந்து முந்துதல் போன்ற பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. இந்த பிரச்சினை நம்முடைய முன்னோர்களிடம் இல்லாமல் இருந்ததற்குக் காரணம் அவர்களுடைய உணவு முறை தான். அவற்றை முழுமையாகக் கடைபிடிக்க முடியாமல் போனாலும் சிலவற்றையாவது அருமை உணர்ந்து சாப்பிட்டு நல்ல திடமான உயிரணுக்களைப் பெறலாம்.

உயிரணுக்கள் உற்பத்தி குறைபாடு

பொதுவாக ஆண்மைக் குறைபாடு என்பது இது விந்தணுக்களின் உற்பத்தி குறைவால் உண்டாகிறது. விந்தணுக்கள் குறைபாட்டை சாதாரண பிரச்னையாக நினைத்து விடக்கூடாது. அது இனப்பெருக்கத்துக்கான ஆதாரம், அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கான விதை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல் விந்தணுக்கள் உற்பத்தி மட்டும் போதுமானதல்ல, அது வீரியம் மிக்கதாக இருக்க வேண்டுமே தவிர, சக்தி இழந்ததாக ஆகிவிடக்கூடாது. விந்தணுக்களின் உற்பத்தி குறைவதாலும் ஆரோக்கியமற்ற விந்தணுக்களாலும் உண்டாகிற ஆண்மைக்குறைவை சரிசெய்ய எத்தனை சிகிச்சைகளை மேற்கொண்டாலும் ஆரோக்கியமான சில உணவுகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த பிரச்னைக்குச் சரியான தீர்வு காண முடியாது. விந்தணுக்களை அதிகரிக்கவும் வீரியமிக்கதாகவும் மாற்றக்கூடிய ஆற்றல் கொண்ட சில உணவுகளை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


தக்காளி

தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் கால்சியம் மிக அதிக அளவில் இருக்கின்றன. தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி - ஆக்சிஜடண்ட் அதிகமாக இருப்பதால், உடலில் ஆற்றலை அதிகரிக்கச் செய்வதோடு விந்தணுக்களின் உற்பத்தியையும் வளர்ச்சியையும் தூண்டுகிறது. ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறது. அதனால் உங்களுடைய அன்றாட உணவில் நிச்சயம் ஐம்பது கிராம் அளவுக்காவது தக்காளி இருக்கும்படி, பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு விந்து நீர்த்துப் போதல் பிரச்சினை இருக்கிறவர்களுக்கு தக்காளி ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும்.

விந்து முந்துதலை தடுக்கும் உணவுகள்


வால்நட்

பூசணி விதை

விதைகள், கொட்டைகள், பருப்பு வகையிலான உணவுகளில் அதிக அளவில் புரதச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. பூசணி விதையில் உள்ள அதிக அளவிலான ஜிங்க் விந்தணுக்களை உறுதியளிக்கச் செய்கின்றன. நாம் கீழே தூக்கி எறிகிற இந்த பூசணிக்காய் விதைகள் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது. இதை நிறைய மருந்து தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நம் இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

அதிக அளவிலான ஃபோலிக் ஆசிட் கொண்ட இயற்கை உணவுகளில் ஒன்று வெள்ளரி விதை. ஆண்கள் தங்கள் உணவுகளில் ஃபோலிக் ஆசிட் குறைவாக இருந்தால், அவை விந்தணுக்களில் உள்ள குரோமோசோம்களின் வளர்ச்சியைப் பாதிக்கும். வெள்ளரியில் நிறையய அற்புத மருத்துவ குணங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படும் சில முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். சிறுநீரகக் கற்கள், நீர்க்கடுப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டது தான் இந்த வெள்ளரி விதை. இதை சாலட் போன்ற உணவுகளின் மீது தூவி சாப்பிட முடியும்.

தண்ணீர்

தண்ணீருக்கும் உயிரணுக்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் சம்பந்தம் இருக்கிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உறுதிபடுத்தவும் ஒரு எளிய வழி தண்ணீர் நிறைய குடிப்பது தான். பொதுவாக தண்ணீர் நிறைய குடிப்பதனால் உங்கள் உடலில் இருக்கும் கழிவுகள் முற்றிலுமாக வெளியேற்றப்படும். உடல் புத்துணர்வோடு இருக்கும். அதிலும் குறிப்பாக காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது உடலில் புதிய ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதற்கும் உடலைப் பொலிவாக வைத்திருக்கவும் நேயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் செய்யும். அதனால் தினமும் தூங்கி எழுந்ததும் கட்டாயம் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

மாதுளையிலும் ஆன்டி - ஆக்சிடண்டுகள் மிக அதிக அளவில் இருப்பதால், அவை ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்ட்ரோஜென் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கின்றன. மேலும் அவை ஆண், பெண் இருவருக்குமான உடலுறவு இச்சையத் தூண்டுவிடுகிறது. பொதுவாகவே மாதுளை மகத்துவம் வாய்ந்த கனி என்பது எல்லோருக்கும் தெரிந்ததுவே. உலக அளவில் மாதுளை குறித்து நிறைய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. சிறுநீரகத்துக்கு மாதுளை மிக நல்லது. அதனால் மாதுளையின் சாறு பிழிந்து, சர்க்கரை ஏதும் சேர்க்காமல் குடித்து வாருங்கள். குறிப்பாக மிக்சியில் அரைக்காமல், வெப்பம் அதிகமில்லாமல், மாதுளை முத்துக்களை லேசாக இடித்து சாறெடுப்பது இன்னும் கூடுதல் பலன் அளிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்