>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 4 ஜனவரி, 2020

    மாமனாரின் அன்பு பரிசு... சிரிக்க... சிந்திக்க.... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!

    சிரிப்பதற்கான நேரம் இது...!!
    நோயாளி : பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்.
    டாக்டர் : அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க.
    நோயாளி : 😠😠
    -------------------------------------------------------------------------------------------------------

    ஜோசியர் : வக்கீல் சார்... வர்ற இருபதாம் தேதி உங்க ராசிக்கு சனி பிடிக்குது.
    வக்கீல் : ஒரு ஆறு மாசம் வாய்தா வாங்க முடியாதா ஜோசியரே?
    ஜோசியர் : 😇😇
    -------------------------------------------------------------------------------------------------------

    சிரிக்க... சிந்திக்க...!!

    ஒரு ஏழையின் சிரிப்பை காண விரும்பிய கடவுள் அவன் முன் தோன்றி உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார்.

    ஆசையோடு பணம், செல்வம், தங்கம், வைரம்... என்றான் ஏழை. கடவுள் வலது கையின் சுட்டு விரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமானது.

    ஆனால், ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடியும் விரலை நீட்ட, அங்கிருந்த மேடை தங்கமானது.

    அவன் பேசாமல் இருந்தான். கடவுள் வேக வேகமாக அந்த அறையில் உள்ள பொருட்களையெல்லாம் தங்கமாக்கினார். அப்போதும் ஏழை சிரிக்கவில்லை.

    சோர்ந்து போன கடவுள் ஏழையிடம் கேட்டார். இன்னும் உனக்கு என்ன வேண்டும்? என்று.

    அந்த விரல் வேண்டும் என்றான் ஏழை. கடவுள் மயங்கி விழுந்தார்.
    -------------------------------------------------------------------------------------------------------
    சிங்கத்தின் வேண்டுதல்...!!

    ஒருநாள் ஒருத்தன் ஒரு சிங்கத்திடம் மாட்டிக்கிட்டான்!!
    'ஐயோ கடவுளே காப்பாத்து"ன்னு மண்டி போட்டு கடவுள கும்பிட ஆரம்பிச்சுட்டான்.!!
    கொஞ்சம் நேரம் கழிச்சி கண்ணை தொறந்து பாத்தா...
    அந்த சிங்கமும் மண்டி போட்டு சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தது.!!
    அத பாத்து அவன் ஷாக் ஆயிட்டான். சிங்கத்திடம் மெதுவா கேட்டான்.
    'நீ எதுக்கு இப்ப ப்ரே பண்ற?
    சிங்கம் 'டேய்... சாப்பிடறதுக்கு முன்னாடி நீங்க எல்லாம் ப்ரே பண்றதில்ல?" அந்த மாதிரிதான்.
    -------------------------------------------------------------------------------------------------------

    படித்ததில் பிடித்தது...!!
    ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..

    ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகு பிரயாணம் போனாள்.. நடுவழியில் தண்ணிக்குள்ள தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ந்து காப்பாத்திட்டாரு.

    மறுநாள் அவர் வீட்டு வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி கார் நின்னுட்டு இருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. மாமியாரின் அன்பு பரிசு என்று...

    ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது... அவரும் ஒரு மாருதி கார் வென்றார்... மாமியாரின் அன்பு பரிசாக...

    மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது... அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார்கிட்ட கடைசியா சொன்னான்.. போய்த் தொலை.. எனக்கு காரும் வேணாம்... ஒன்னும் வேணாம்... சாவுற வரைக்கும் சைக்கிள்ளயே போயிக்கிறேன்... பொண்ணா வளத்து வெச்சிருக்க..?

    மாமியார் செத்து போயிட்டாங்க.. மறுநாள் அவன் வீட்டு வாசலில் ஒரு பளபளக்கும் ஃபாரின் கார் நின்னுச்சு.. மாமனாரின் அன்பு பரிசு என்ற அட்டையோடு.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக