ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய உடல் ஆரோக்கியம்,
சருமம் போன்றவற்றை ஆரோக்கியத்துடன் பராமரிக்க வேண்டும்.
அந்தவகையில், பெண்கள் சாப்பிட வேண்டிய
உணவுகளும், அது எதற்காக என்ற விளக்கத்தையும் தெரிந்து கொள்வோம்.
கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின்
நிறைந்த உணவுகள் மற்றும் தானியங்களை அதிகம் சாப்பிடும்போது உடலின் ஆற்றல் உற்பத்தி
அதிகரிக்கும்.
உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்
பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது நல்லது. குறைந்த பட்சம் தினமும் ஒரு
பழமாவது சாப்பிட வேண்டும்.
உடலின் இரும்புச்சத்து தேவைக்கு கேழ்வரகு, கீரை,
எள், மீன், முட்டை சாப்பிடலாம். இது இளம்வயது பெண்களுக்கு, மாதவிடாய் கால பிரச்சனைகளை
தீர்க்க உதவும்.
இளம்வயது பருவத்தினர் பலரும் பால் சார்ந்த
பொருட்களை ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் பால், சீஸ், தயிர் போன்றவற்றை அவசியம்
உட்கொள்ள வேண்டும். இதனால் இதயம் பாதுகாப்பாகவும், தசைகள் வலிமையாகவும் இருக்கும்.
எண்ணெய் நிறைந்த உணவு பொருட்களை
உட்கொள்வது, பருமனை ஏற்படுத்தும். இளம்வயது பருவத்தில் பெண்களுக்கு ஏற்படும்
பருமனே நீர்க்கட்டி, கர்ப்பப்பை தொடர்பான பல பிரச்சனைகளுக்கு அடித்தளமாக அமையலாம்.
முடிந்தவரை எண்ணெய், நெய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும். ஒரு
நாளைக்கு, குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு
ப்ரோக்கோலி, க்ரீன் டீ சாப்பிடலாம்.
பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும்
பாதிப்புகளை தவிர்க்க வைட்டமின் நு மற்றும் வைட்டமின் ஊ அதிகமுள்ள உணவுகளை
எடுத்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக, நட்ஸ் வகைகள் மற்றும் மீனை சாப்பிடலாம்.
நரம்பு மண்டலத்தை பாதுகாக்க பீட்ரூட்,
கேரட், அவகோடா போன்றவற்றை சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக