Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 ஜூலை, 2020

இதில் நீங்கள் யார்? மிகப்பெரிய ரகசியம் இதுதான்...- ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------------
சிரிக்க... சிரிக்க... சிரிப்பு...!!
---------------------------------------------------------
அருண் : ஒருத்தன் அவங்க வீட்டு சுவர்ல ஆணி அடிச்சானாமா. ஆனா ஆணி சுவருக்குள்ள போகவே இல்லையாமா? ஏன்?
குமார் : தெரியல... நீயே சொல்லு...
அருண் : ஏன்னா அது பட்டாணியாமா...😂
குமார் : 😏😏
---------------------------------------------------------
பாபு : எங்க ஊருல செம மழை... நான் குடையே இல்லாம நடந்து போனேன்... ஆனால் நனையவே இல்ல தெரியுமா?
ராமு : எப்படி?
பாபு : நான்தான் வீட்டுக்குள்ள நடந்து போனேனே...😆
ராமு : 😒😒
---------------------------------------------------------
சீனு : ஒருத்தன் குக்கர தூக்கி கீழே போட்டான்... ஆனா அது உடையவே இல்ல தெரியுமா?
தீபக் : ஏன்?
சீனு : ஏன்னா அது Butterfly குக்கர்...😋
தீபக் : 😑😑
---------------------------------------------------------
   படித்ததில் பிடித்தது...!!
---------------------------------------------------------
தோல்வி என்பது அடைக்கப்பட்ட ஒருவழி பாதை அல்ல...
அது வெற்றிக்கான வேறு பாதையை கண்டுபிடிக்க ஒரு வாய்ப்பு...!!

வாழ்க்கையில் பிடித்தமானவை அமையவில்லை 
என்று புலம்பிக் கொண்டு இருக்காமல், 
கிடைத்ததை பொருத்தமானதாக 
மாற்றிக் கொள்வதே சிறப்பு...
மிகப்பெரிய ரகசியம்...!!
தேவைப்படும்போது அறிவையும், 
தேவையற்றபோது மௌனத்தையும், 
சமநிலையில் பயன்படுத்தி வாழ தெரிந்தால் 
எதையும் தேட வேண்டிய அவசியம் இருக்காது....இதுதான் மிகப்பெரிய ரகசியம்...!!
---------------------------------------------------------
      இதில் நீங்கள் யார்?
---------------------------------------------------------
⭐ கடனே இல்லாதவன் பணக்காரன்...
⭐ நோயே இல்லாதவன் லட்சாதிபதி...
⭐ கோபமே இல்லாதவன் கோடீஸ்வரன்...!!
---------------------------------------------------------
          இது உண்மையா?
---------------------------------------------------------
👉 பிறர் வெற்றியை கொண்டாடுபவன் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் ருசிக்கிறான்... தோல்வியிலும் அவனை சுற்றி நல்ல மனிதர்கள் நிலைக்கிறார்கள்.

👉 பிறருடைய வெற்றியை கண்டு மனதில் புழுங்குபவன், வாழ்வின் இறுதி வரை ஊருக்காக ஒரு முகமூடி போடுகிறான். அவனை சுற்றி போலியான மனிதர்கள் நிலைக்கிறார்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக