டிவி பார்த்தால் ஊதியம்
கொரோனா ஊரடங்கு காரணத்தால் பலரும் வருமானத்தை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் டிவி பார்த்தால் ஊதியம் தரப்படுவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பணி டெக் மாஸ்டர் என அழைக்கப்படுகிறது. இதில் டிவி பார்ப்பதுதான் வேலை, சம்பளம் வாங்கிக் கொண்டே டிவி பார்க்கலாம்.
கூர்மையான பார்வை திறன்
டெக் மாஸ்டர் பணியில் சேர தயாராக இருப்பவர்கள் கூர்மையான பார்வையும், கருத்துகளை எழுத்து வடிவில் பதிவிட தெரிந்திருந்தால் மட்டுமே போதுமானாது. இந்த அறிவிப்பை யூகே-வை ஆன்லைன் சந்தையான OnBuy இந்த வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.
இது கவலையா இருக்கு., 59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவுக்கு சீனா சொன்ன பதில் இதுதான்!
OnBuy நிறுவனம் அறிவிப்பு
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் என்று தங்களை வர்ணிக்கும் OnBuy. தொலைக்காட்சிகள், கேமராக்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஹோம் சினிமா அமைப்புகள் உள்ளிட்ட பலவிதமான மின்னணு பொருட்களுக்கு கருத்துத் தெரிவிக்க ‘தொழில்நுட்ப சோதனையாளரை' நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முழுமையாக ஆராய்ந்து குறைநிறைகளை கூற வேண்டும்
ஆன்பய் நிறுவனம் அறிவிப்பின்படி அது அறிவித்துள்ள பொருட்களை முழுமையாக ஆராய்ந்து, வடிவமைப்பு வசதிகள் குறைநிறைகள் உள்ளிட்டவைகளை சோதித்து பார்க்கவேண்டும். அதன் அம்சங்களை ஆராய்ந்து தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் வீட்டில் இருந்தபடியே சோதனை செய்யலாம்
அதிர்ஷ்டம் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வீட்டில் இருந்தபடியே பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சோதனையாளர்களள் எதிர்பார்க்கப்படுவைகளை புகைப்படங்களாக எடுத்து 200 சொற்களில் அறிக்கையாக தயாரித்து அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இதில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள ஒவ்வொரு மாதமும் தளத்திலிருந்து பல தயாரிப்புகள் வழங்கப்படும்.
வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் ஆயுள்
ஒவ்வொரு தயாரிப்புகளையும் நீங்கள் முழுமையாக சோதிக்க வேண்டும், வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் ஆயுள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதோடு, ஒலி, காட்சி, செயல்பாடு மற்றும் பணத்திற்கான மதிப்பு உள்ளிட்ட குணங்களைப் பற்றி விவாதிக்க வேண்டும்.
20 மணிநேரத்துக்கு ரூ.65,000 சம்பளம்
தொழில்நுட்ப சோதனையாளர் வாரத்திற்கு குறைந்தபட்சம் 20 மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும், இதற்கு 700 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பின்படி 65 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். மேலும் onbuy நிறுவன அறிவிப்பின்படி ஒரு மணிநேரம் டிவி பார்ப்பதற்கு 35 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.3200 ஊதியமாக கொடுக்கப்படும்.
தொழில்முறை அனுபவம்
தொழில்நுட்ப துறையில் உங்களுக்கு எந்த தொழில்முறை அனுபவமும் தேவையில்லை, ஆனால் நீங்கள் கேஜெட்டுகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பற்றிய திறனை காட்ட வேண்டும் என்பது அவசியம். அதேபோல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாவும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர்களாவும், எழுதத் தெரிந்தவர்களாகவும் இருந்தால் மட்டும் போதுமானது.
விடைகொடு மனமே: 'அன்புள்ள பயனர்களே' என முற்றிலும் சேவையை நிறுத்திய டிக்டாக்- எதிலும் எடுக்கவில்லை!
தலைமை நிர்வாக அதிகாரி
OnBuy இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேஸ் பாட்டன் இதுகுறித்து கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான தகவல்களையும், தடையற்ற அனுபவத்தையும் வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என தெரிவித்தார். வாடிக்கையாளர்களின் தேவையை தெளிவாக அறிந்திருந்தால் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும் எனவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக