>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 20 ஜூலை, 2020

    பாராட்டும், புகழும் குவியும்போது... என்ன செய்ய வேண்டும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -------------------------------------------------------
    இது சிரிக்க மட்டுமே...!!
    -------------------------------------------------------
    சீலா : என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு...
    மாலா : அட... நடக்கறதுக்கு கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன?
    சீலா : 😏😏
    -------------------------------------------------------
    ரேடியோ தொகுப்பாளர் : வணக்கம் சார்... யார் பேசுறீங்க.
    வரதராஜன் : நான் செங்கோட்டையிடல இருந்து வரதராஜன் பேசுறேன்..!!
    ரேடியோ தொகுப்பாளர் : சொல்லுங்க சார். நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??
    வரதராஜன் : என் பொண்டாட்டி சண்டை போட்டு என்னை வெளியே தள்ளி கதவை பூட்டிக்கிட்டு உள்ள இருக்கா சார்... அவளை கதவை திறக்க சொல்லுங்க... அப்புறம் அவளுக்காக 'வாடி பொட்டப்புள்ள வெளியே.. என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை போடுங்க....
    ரேடியோ தொகுப்பாளர் : 😳😳
    -------------------------------------------------------
    பாபு : எனக்கு இருமல் வந்தா உடனே டாக்டரை போய் பாத்துருவேன்... நீங்க?
    சோமு : நான் உடனே இரும்பிடுவேன்...
    பாபு : 😬😬

    -------------------------------------------------------
    பாராட்டும், புகழும் குவியும்போது... என்ன செய்ய வேண்டும்?
    -------------------------------------------------------
    பாராட்டும், புகழும் குவியும்போது குட்டையான வாசலுக்குள்

    குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும்...

    இல்லையேல் நெற்றி அடி கிடைக்கும்.
    நற்சிந்தனை வரிகள்...!!
    🔟 பத்து ரூபாய் சம்பாதிக்க வேண்டிய இடத்தில் எட்டு ரூபாய் சம்பாதித்தால் அவன் முட்டாள்...

    🔟 பத்து ரூபாய் செலவு செய்ய வேண்டிய இடத்தில் எட்டு ரூபாய் செலவு செய்பவன் புத்திசாலி...

    🔟 பத்து ரூபாய் சம்பாதிக்க வேண்டிய இடத்தில் பன்னிரெண்டு ரூபாய் சம்பாதிப்பவன் திறமைசாலி...

    🔟 பத்து ரூபாய் செலவு செய்ய வேண்டிய இடத்தில் பன்னிரெண்டு ரூபாய் செலவு செய்பவன் சோம்பேறி...!!
    -------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    -------------------------------------------------------
    நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே யொழிய விடல்.

    விளக்கம் :

    நடுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக்கூடியதாக இருந்தாலும், அந்த பயனை கைவிட்டு நடுநிலையைத்தான் கடைபிடிக்க வேண்டும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக