>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 20 ஜூலை, 2020

    ஓநாய்க்கு உதவிய ஆட்டுக்குட்டி... ஆனால், இறுதியில் நடந்தது என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -------------------------------------------------------
    சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
    -------------------------------------------------------
    நோயாளி : டாக்டர் என் கால் நல்லா போயிடுமா?.
    டாக்டர் : இன்னும் மூனு நாளைக்குள்ள உங்க கால் சரியாயிடும்.
    நோயாளி : நான் நடக்கலாமா?
    டாக்டர் : நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க.
    நோயாளி : இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர். நான் ஓடலாமா.?
    டாக்டர் : தாராளமா ஓடலாம்.
    நோயாளி : இந்த மருந்துக்கு அத்தனை பவரா... நான் சைக்கிள் ஓட்டலாமா?.
    டாக்டர் : ம்... ஓட்டலாமே...
    நோயாளி : ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது... அதான் கேட்டேன்.
    டாக்டர் : 😳😳

    -------------------------------------------------------
    படித்ததில் பிடித்த கதை...!!
    -------------------------------------------------------
    செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண்மூடி, புல்லாங்குழல் வாசித்து கொண்டிருந்தான்... புல்வெளியை சுற்றி வேலி போடப்பட்டிருந்தது.

    அதன் அருகே ஒரு ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலியின் வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக்குட்டியை பார்த்தது.

    வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப்பார்த்த ஆட்டுக்குட்டி உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது. ஓநாயும், நண்பா எனக்கு இங்கே லேசான புல் கிடைக்குமா? என பார்க்கிறேன்.

    இளம்புல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை சாப்பிட்டு ஜில் ஜில் என்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? உங்களுக்கெல்லாம் இந்த வரம் கிடைத்திருக்கிறது.

    ஆனால் எனக்கு அது கிடைக்கவில்லையே? என வருத்தத்துடன் கூறியது. அப்படியா? நீ புல் சாப்பிடுவாயா? நீ மாமிசத்தை தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும், அப்பாவும் சொன்னார்களே...!! என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி.

    அதற்கு அந்த ஓநாய் அப்படியெல்லாம் இல்லை... அது பொய் என்று கூறியது. சரி இரு நான் வெளியே வந்து மலைக்கு அந்த பக்கம் இளம்புல் இருக்கும் இடத்தை உனக்கு காட்டுகிறேன்.

    நாம் இருவரும் ஒன்றாக சென்று சாப்பிட்டுவிட்டு ஜாலியாக விளையாடலாம் என்றது ஆட்டுக்குட்டி. பின் ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக வெளியே வந்தது.. உடனே ஓநாய் அதை வேகமாக தாவி கடித்து கொன்றுவிட்டது.

    அனுபவம் நிறைந்த தாய், தந்தையின் பேச்சை கேட்டிருந்தால் மதிப்பு வாய்ந்த தனது உயிரை அந்த ஆட்டுக்குட்டி இழந்திருக்காது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக