வெள்ளி, 24 ஜூலை, 2020

ஒளிவீசும் இரண்டு வைரங்கள்... வெற்றியின் ரகசியம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------------------------------------------
🌟 இரத்த வங்கிக்கு போனா இரத்தம் வாங்கலாம்... ஆனா
இந்தியன் வங்கிக்கு போனா இந்தியாவ வாங்க முடியுமா?

🌟 என்னதான் விடிய விடிய டிவி ஓடினாலும்... ஒரு இஞ்ச் சாவது அதுனால நகர முடியுமா?

🌟 வாழை மரம் 'தார்" போடும்... ஆனால், அதை வெச்சு நம்மால 'ரோடு" போட முடியுமா?

🌟 கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்...
ஆனா... வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா?

-------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!
-------------------------------------------------------------------------
ஆற்றங்கரை ஓரமாக வந்து கொண்டிருந்த வழிப்போக்கன் 🚶 ஒருவனுக்கு வைரக்கல் 💎 ஒன்று கண்ணில் தென்பட்டது👀...

அது வைரம் என்று அறியாமல், விலை போகுமா? என்ற சந்தேகத்துடன் 🤔 கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..

அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்..

ஆனால் வழிப்போக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்..

ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான்..

இதை கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டு சென்றான்...

கோபமடைந்த 😡 வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, 'அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல் விற்றுவிட்டாயே!" என்று திட்டினான்...

அதற்கு அவன், 'அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான்...

ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள்" என்றான்...

நீதி :

சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும், கிடைத்ததை விட்டுவிட்டு தவிக்கிறார்கள்.
-------------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!! -------------------------------------------------------------------------
👉 வெற்றியின் முதல் ரகசியம் தன்னம்பிக்கை.

👉 வெற்றி என்பது ஒரு பயணம். பயணத்தின் முடிவல்ல.

👉 துணிச்சலின் குழந்தையே வெற்றி.

👉 தோல்வியை சந்திக்கும் துணிச்சல் வெற்றிக்கு உண்டு.

👉 வெற்றி மகுடத்தில் ஒளிவீசி திகழும் இரண்டு வைரங்கள் நம்பிக்கையும், துணிச்சலும்.

👉 எல்லையற்ற பொறுமை, தூய்மை, விடாமுயற்சி இவையே வெற்றியின் ரகசியம்.

👉 இன்று நீங்கள் அனுபவிக்கும் வெற்றி, நேற்று நீங்கள் கொடுத்த விலையின் விளைவு.

👉 தோல்வி அடையாமல் இருப்பதற்கு நம்பகமான வழி வெற்றி பெறுவோம் என்ற உறுதிப்பாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்