>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 16 ஜூன், 2020

    இவர்கள் தோற்றதாய் சரித்திரம் இல்லை - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -----------------------------------------------------------------------
    சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
    -----------------------------------------------------------------------
    மகன் : என்னம்மா பாயாசம், ஜிலேபின்னு இனிப்பாவே செஞ்சிருக்கீங்க?
    அம்மா : ஆமா... உங்க அப்பாவும், நீயும் பத்தாம் வகுப்புல பாஸ் பண்ணீட்டிங்க... அதனால தான்...
    மகன் : என்னது? அப்பா இப்போதான் பத்தாவது பாஸ் பண்ணியிருக்காரா?
    அம்மா : 😋😋
    -----------------------------------------------------------------------
    ஆசிரியர் : உன் பக்கத்துல தூங்குறவனை எழுப்பு...
    ந‌ண்ப‌ன் : நீங்க தானே தூங்க வெச்சீங்க. நீங்களே எழுப்புங்க.
    ஆசிரியர் : 😡😡
    -----------------------------------------------------------------------
    ஆசிரியர் : சிவா... ஏன்டா நேத்து பள்ளிக்கூடத்துக்கு வரல?
    சிவா : இதான் சார் உங்களுக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம். நீங்க கூடத்தான் போன வாரம் ஒரு நாள் வரல, நான் ஏன்னு கேட்டேனா?
    ஆசிரியர் : 😏😏
    -----------------------------------------------------------------------
    இவர்கள் தோற்றதாய் சரித்திரம் இல்லை...!!
    -----------------------------------------------------------------------
    அறிவு நிறைந்தவர்கள் தோற்றதுண்டு...
    திறமை கொண்டவர்கள் தோற்றதுண்டு...
    பணபலம் பொருந்தியவர்கள் தோற்றதுண்டு...
    ஆனால், விடாமுயற்சி செய்தவர்கள் தோற்றதாய் சரித்திரம் இல்லை...
    -----------------------------------------------------------------------
    நம்மை நல்ல மனிதனாக மாற்றக்கூடியது எது தெரியுமா?
    முதலில் நல்ல பழக்க வழக்கங்களை உருவாக்க வேண்டும்...
    அந்த பழக்கங்களே பின்னாளில் நம்மை நல்ல மனிதனாக உருவாக்கும்.
    -----------------------------------------------------------------------
                  விடுகதைகள் !!
    -----------------------------------------------------------------------
    1. சின்னப் பெட்டிக்குள் சிறை இருப்பான், வெளியே வந்தால் பளிச்சிடுவான். அது என்ன?

    2. குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்து நிற்குது. அது என்ன?

    3. வம்பு சண்டைக்கு இழுத்தாலும் வாசல் தாண்ட மாட்டான். அவன் யார்?

    4. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல். அது என்ன?

    5. கண்ணுக்கு தெரியாதவன், உயிருக்கு உகந்தவன். அவன் யார்?
    -----------------------------------------------------------------------
                       விடைகள் :
    -----------------------------------------------------------------------
    1. முத்து
    2. தேங்காய்
    3. நாக்கு
    4. முட்டை
    5. காற்று.
    -----------------------------------------------------------------------
             குறளும்... பொருளும்...!!
    -----------------------------------------------------------------------
    தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
    தீவினை யென்னுஞ் செறுக்கு.

    விளக்கம்

    தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள். தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனை செய்திட சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக