Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 டிசம்பர், 2019

நிம்மதியாக வாழ இரண்டு வழி இருக்கு... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்கலாம் வாங்க...!!
பாபு : எனக்கு ஹார்ட்ல மேஜர் ஆப்ரேஷன் பண்ணனுமாம்... டாக்டர் சொல்லிட்டாரு...
சோமு : டாக்டர் இருக்கும்போது மேஜர் எதுக்கு ஆப்ரேஷன் பண்றாரு..,
பாபு : 😡😡
--------------------------------------------------------------------------------------------------
அருண் : தெருவுல போற எல்லாரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டுப்போறாங்களே ஏன்?
ராம் : அந்த ஆள் 'வாட்ச்" மேனாம்..!!
அருண் : 😬😬
--------------------------------------------------------------------------------------------------

கார்த்திக் : நீயும், இன்னும் இரண்டுபேருமா சேந்து குண்டூசி குயஉவழசல வைக்கிறதா இருந்தீங்களே என்ன ஆச்சு?
பூபதி : அவங்க 'பின்" வாங்கிட்டாங்க...
கார்த்திக் : 😝😝
--------------------------------------------------------------------------------------------------

மனைவி : என்னங்க நான் புக்கை பாத்து மைசூர்பாகு பண்ணிருக்கேன்.!!
கணவன் : அந்த புக்குல மைசூர்பாகை எப்படி உடைக்கனும்னு போட்டுறருக்கா...
மனைவி : 😠😠
--------------------------------------------------------------------------------------------------

குறளும்... பொருளும்...!!
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

பொருள் :

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை, புகழும் இல்லாதவை.
--------------------------------------------------------------------------------------------------

இதை மட்டும் தேடுங்கள்...!!
அன்பை தேடு...
ஆணவத்தை தேடாதே...

அறிவை தேடு...
அகந்தையை நாடாதே...

பண்பை தேடு...
பகட்டை நாடாதே...

தன்னடக்கம் கொள்...
தற்பெருமை கொள்ளாதே...
--------------------------------------------------------------------------------------------------

நிம்மதியாக வாழ...!!
நிம்மதியாக வாழ இரண்டே வழிதான்...
நாம ராஜாவா இருக்கணும்...
இல்லன்னா யார் ராஜாவா இருந்தா
நமக்கு என்னன்னு வாழணும்...
--------------------------------------------------------------------------------------------------

இப்படி இருந்தால் கவலையே வராது...!!
நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால்,
கவலையே வராது...

நீ அறிவாளியாக இருந்தால்,
குழப்பம் வராது...

நீ துணிவுள்ளவனாக இருந்தால்,
அச்சம் வராது...
--------------------------------------------------------------------------------------------------

மனிதனாக வாழ வழிகள்...!
மிகவும் மதிப்புக்குரியவர்கள்.... பெற்றோர்
மிக மிக நல்ல நாள்... இன்று
மிகப்பெரிய வெகுமதி... மன்னிப்பு
மிகவும் வேண்டியது... பணிவு
மிகவும் வேண்டாதது... வெறுப்பு
மிகப்பெரிய தேவை... நம்பிக்கை
மிகக்கொடிய நோய்... பேராசை
மிகவும் சுலபமானது... குற்றம்காணல்
தரமற்ற குணம்... பொறாமை
நம்பக்கூடாதது... வதந்தி
ஆபத்தை விழைவிப்பது... அதிக பேச்சு
செய்யக்கூடாதது... நம்பிக்கை துரோகம்
செய்யக்கூடியது... உதவி
விலக்க வேண்டியது... சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி... உழைப்பு
நழுவவிடக்கூடாதது... வாய்ப்பு
பிரியக்கூடாதது... நட்பு
மறக்கக்கூடாதது... நன்றி
ஒவ்வொரு நிமிடமும் இருக்க வேண்டியது... இறைபயம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக