ஒன்பது என்ற எண்ணிற்கு என்றும் ஒரு
சிறப்பான மதிப்பு உள்ளது. நவதீர்த்தங்கள், நவலோகம், நவதுர்க்கா, நவ சக்திகள், நவதானியங்கள்,
நவரத்தினங்கள் என ஒன்பதாம் எண்ணிற்கு தனிச்சிறப்பு உண்டு. 9, 18, 27 என்ற எண்ணில்
பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள்.
குணநலன்கள் :
எதையுமே
தனக்கு பிடித்த மாதிரிதான் செய்ய வேண்டுமென்ற பிடிவாத குணம் இருக்கும். வெகுளியாக
காணப்படும் இவர்கள் எந்தவொரு விஷயத்தையும் ரகசியமாக வைத்திராமல் மனம் திறந்து
பேசுவார்கள்.
தன்னிடத்தில்
அன்பும், பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் அவற்றை
துணிச்சலுடன் எதிர்த்து அவர்களுக்கு உதவி செய்வார்கள்.
மன
அமைதியை இழக்கக்கூடிய சூழ்நிலைகள் வந்தாலும் அதை பிறருக்கு தெரியாதவாறு மறைத்துக்
கொள்வார்கள்.
அஞ்சா
நெஞ்சமும், தைரியமும் படைத்தவர்களாக இருப்பார்கள். பெரியவர்களிடத்தில்
மரியாதையும், சிறியவர்களை அடக்கியாளும் குணமும் இருக்கும். மற்றவர்களின் குற்றம்
குறைகளை கண்டுபிடித்து அம்பல மாக்குவதில் வல்லவர்கள்.
பாரிகார கல் :
செவ்வாயின்
ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய கல் பவளமாகும். பவளத்தினை அணிந்து
கொள்வதால் நன்மைகள் அதிகரிக்கும். தீமைகள் விலகி ஓடும்.
பரிகாரம் :
முருகப்
பெருமானை வழிபாடு செய்வது மிகவும் உகந்ததாகும். சஷ்டி விரதங்களும் மற்றும்
கிருத்திகை விரதமும் இருப்பது நன்மையைத் தரும். கந்த சஷ்டி கவசத்தை தினமும்
படிப்பதால் மேலும் பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்டம் தருபவை :
அதிர்ஷ்ட
தேதி - 9, 18, 27
அதிர்ஷ்ட
நிறம் - சிவப்பு
அதிர்ஷ்ட
திசை - தெற்கு
அதிர்ஷ்ட
கிழமை - செவ்வாய்
அதிர்ஷ்ட
கல் - பவளம்
அதிர்ஷ்ட
தெய்வம் - முருகன்
செவ்வாயின்
ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்த எண்களிலுள்ள ரகசியங்களை அறிந்துக் கொண்டு
பரிகாரம் மற்றும் பூஜைகள் செய்தால் அனைத்தும் வெற்றிகளாகவே அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக