உதடுகளை கவர்ச்சியாக அழகுபடுத்த விரும்புபவர்கள் அழகுச்சாதன பொருட்களை மட்டும் நம்பி இருக்காமல், வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தியும் அழகு பெற செய்யலாம்.
ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரை கலந்து அடிக்கடி உதட்டில் பூசி வந்தால் இறந்த செல்கள் வெளியேறி உதடுகள் அழகு பெறும்.
தினமும் ஆலிவ் ஆயிலுடன் இலவங்க பட்டை பவுடர், சிறிதளவு உப்பு ஆகியவற்றை கலந்து உதட்டில் பூசி, சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை கொண்டு கழுவினால் உதடுகள் பொலிவு பெறும்.
ஈரத்தன்மையின்றி உலர்ந்து காணப்படும் உதடுகளுக்கு தேனை அடிக்கடி பயன்படுத்தலாம். தேனுடன் எலுமிச்சைச்சாறு, சர்க்கரை கலந்து தினமும் பூசி வந்தால் உதடுகள் மென்மையுடனும், பளபளப்புடனும் இருக்கும்.
ஏனெனில் தேனில் சருமத்தின் ஈரப்பசையை தக்க வைக்கும் சக்தி இருப்பதால், அவை உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். அதற்கு சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
உதடுகள் பளிச்சென்று தோற்றமளிக்க புதினாவும் உதவுகிறது. புதினாவை சாறு பிழிந்து சர்க்கரையுடன் கலந்து தினமும் உதட்டில் பூசி வர வேண்டும். அவை உலர்ந்தவுடன் கழுவினால் உதடுகள் அழகு பெறும்.
குங்குமப்பூ உதட்டில் உள்ள கருமை நிறத்தை மாற்றும் தன்மைகொண்டது. பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து உதட்டில் பூசி வந்தால் உதடுகள் பொலிவு பெறும்.
இஞ்சியும் உதடுக்கு பொலிவு தரும். தேங்காய் எண்ணெய், சர்க்கரை, ஜாதிக்காய் பொடி, இலவங்க பட்டைத்தூள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் குழப்பி உதடுகளில் பூசி வரலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் உதடுகள் மிருதுவாக காட்சியளிக்கும்.
அடிக்கடி கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றும்.
பால் பொருட்களில் ஒன்றான தயிரில் அதிக எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு அடிக்கடி தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதை தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக