Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 21 டிசம்பர், 2019

பனிக்காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

 Image result for பனிக்காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
ழைக்காலம், குளிர்காலம் என்று இருந்தாலும் காலநிலை மாறி, வருடத்தின் முக்கால்வாசி நாட்கள் வெப்பத்தில் கழிகின்றன.

 குளிர்காலம் என்பது நமக்கு மட்டுமல்ல, கிருமிகளுக்கும் கொண்டாட்டமான காலம்தான். இந்த இதமான தட்ப வெப்பநிலை, கிருமிகள் செழித்து வளர உதவும். இதனால், ஜலதோஷம், தும்மல், காய்ச்சல், சுவாசப் பிரச்சனைகள் உண்டாகிறது.

 அதிலும், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு, 'பனிக்காலம்" என்பதே பரிதாபத்துக்குரிய காலம்தான்.

 பனிக்காலத்தில் குழந்தைகளின் சருமத்துக்கு வரக்கூடிய பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ன? என்பதை பற்றி பார்க்கலாம்.

பனிக்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் :

 குளிர்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது, பச்சிளம் குழந்தைகளும், முதியோர்களும்தான்.

 ஒரே சீரான தட்ப வெப்பநிலையில்லாமல் வெப்பமும், பனியும் கலந்து இருக்கும் நாட்களில் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

 டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவலாம்.

 நோய் எதிர்ப்பு சக்தியில்லாத குழந்தைகளுக்கு ஃப்ள+ மற்றும் டைஃபாய்டு காய்ச்சல் மிக எளிதாக தாக்கலாம்.

 வெயில் காலங்களில் நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் பழங்கள், குளிர்காலங்களில் ஒத்துக்கொள்ளாது. காரணம், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றமாதிரி நம் உடல் செயல்பாடுகளும் மாறுகிறது.

தீர்வுகள் :

 பனிக்காலத்தில் குழந்தைகளை மிக கவனமாகவும், சரியாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 குளிர்ந்த வெப்பநிலையில் குழந்தைகளின் சருமம் உலர்ந்து விடும். சருமத்தில் சில வெடிப்புகள் போன்றவையும் காணப்படும். சின்ன சின்ன மாற்றங்களை செய்து கொண்டால் குழந்தைகளின் சருமத்தைக் குளிர்காலத்தில் இருந்து காக்க முடியும்.

 பனிக்காலத்தில் குழந்தைகளை நீண்ட நேரமாக குளிக்க வைக்க வேண்டாம். இளஞ்சூடான நீரில் குளிக்க வைப்பது நல்லது. சூடான நீரில் குளித்தால் சருமம் வறண்டு போகும்.

 அதிக வாசனை, நுரை, கெமிக்கல்கள் இல்லாத சோப்பை பயன்படுத்துங்கள். குளிக்கும்போது, குழந்தைகளின் சருமத்தை தேய்க்க வேண்டாம்.

 பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு கொதித்து ஆறவைத்த குடிநீரையே கொடுத்து பழகுங்கள்.

 முடிந்தவரை, வீசிங் வரும் குழந்தைகள் இருக்கும் இடத்தை, தூசி இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், தலையணை உறை போன்றவற்றை சுத்தமாக பராமரிப்பது நல்லது.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, உடைக்கு வெளியே தெரியும் கை, கால் போன்ற பகுதிகளில் கொசு விரட்டும் க்ரீம் தடவி அனுப்பலாம். இதனால் சருமம் பாதுகாப்பாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக