கபாலீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீஸ்வரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
சுவாமி : கபாலீஸ்வரர்
அம்பாள் : கற்பகாம்பாள்
தீர்த்தம் : கபாலீ தீர்த்தம்
தலவிருட்சம் : புன்னை மரம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
தலச்சிறப்பு :
வாயிலார் நாயனார் அவதரித்த தலமாகும்.
சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கியது மற்றும் அம்பாள் மயில் வடிவம் கொண்டு வழிபட்டது ஆகியன இத்தலத்தில் நிகழ்ந்தன என்பது ஐதீகம்.
முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம்.
பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம்.
தேவாரம் பாடல் பெற்ற கோவில்களில் இக்கோவிலும் ஒன்று.
சிவன் இத்திருக்கோவிலில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது.
திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோவில், நாற்புறமும் மாடவீதிகளையும், திருக்குளம், அழகிய கோபுரங்கள் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.
தல வரலாறு :
பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அவ்வேளையில் மயில் ஒன்று நடன மாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோச்சனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோச்சனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி விமோச்சனம் பெற்றாள், பார்வதிதேவி. இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலாப்பூர் என்றும், திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது.
பிராத்தனை :
இத்தலத்து ஈசனை வழிபட்டால் மன அமைதி கிடைக்கும்.
இத்தலத்து அம்மனை வழிப்பட்டால் உடல் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமடைகிறது.
கல்யாண வரம், குழந்தை வரம் வேன்டி இத்தலத்து இறைவனை பிராத்திக்கின்றனர்.
திருவிழா :
பங்குனிப் பெருவிழா - பங்குனி 10 நாட்கள் அறுபத்துமூவர் திருவிழா.
பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.
தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் மற்றும் பிற விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக