>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 18 மே, 2020

    படிங்க... சிரிங்க... சிந்தியுங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்கலாம் வாங்க...!!

    நீதிபதி : சாமி தலையில் இருந்த தங்க கிரீடத்தை திருடுனியா?
    குற்றவாளி : ஆமா சார், சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்!!
    நீதிபதி : 😳😳
    ----------------------------------------------------------------------
    முதலாளி : டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துட்டு வர்றேன்... நீ கடையைப் பாத்துக்கோ...
    முனியன் : உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துட்டு வந்துடறனே!
    முதலாளி : 😡😡
    ----------------------------------------------------------------------
    உத‌வியா‌ள‌ர் : சார்... உங்க மனைவிக்கிட்ட இருந்து போன்...
    மேலாள‌ர் : பெருசா நான் என்ன பேசிடப் போறேன்...? நீயே அட்டென்ட் பண்ணி, 'ம்...ம்...ம்...ம்..."னு செல்லிடு!
    உத‌வியா‌ள‌ர் : 😂😂
    ----------------------------------------------------------------------
    மனைவி : என் அம்மா தங்கியிருக்கும் குகைக்குள்ள ஒரு புலி வந்துருச்சு. காப்பாத்துங்க...
    கணவன் : நான் என்ன செய்ய முடியும்? புலிக்கு அதிர்ஷ்டமிருந்தால் தப்பிப் பிழைக்கட்டும்.
    மனைவி : 😖😖
    ----------------------------------------------------------------------
    சிந்தனை வரிகள்...!!

    உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான செல்வம் இங்கேயே உள்ளது.
    ஆனால், ஒரு தனி மனிதனின் பேராசைக்கு முன்னால்தான் அது போதாது...

    உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக மனம் வருந்தாதே...
    ஏனெனில் அதுதான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் இதயத்தை அளிக்க போகிறது.

    பத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் அரைகுறையாக செய்வதை தவிர்த்து, ஒரே வேலையை முழுமனதோடும், கருத்தோடும் செய்யலாம்.

    பிரச்சனை என்பது நீயே உனக்கான வலையை விரித்து மாட்டி கொள்ளும் செயல் போலவே...
    அனுமதியில்லாமல் வருவது இல்லை. உனக்கான ஆபத்தை நீயே தேடி கொள்கிறாய்.
    ----------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு.

    விளக்கம் :

    பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக