>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 18 மே, 2020

    வாழ்க்கை... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

    நீதிபதி : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்றாங்க.. நீங்க இல்லன்னு சொல்றீங்க... இதுக்கு ஆதாரம் ஏதாவது இருக்கா?

    குற்றவாளி : ஐயா... நான் என் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போயிக்கிட்டு இருந்தேன்... நீங்களே சொல்லுங்க... எவனாவது பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வர வேகமா போவானா?
    நீதிபதி : கேஸ் டிஸ்மிஸ்... முதல்ல அவர விடுதலை செய்யுங்க...
    குற்றவாளி : 😂😂
    ----------------------------------------------------------------------
    பூபதி : அண்ணே, உங்களை பாத்து ரொம்ப நாளாச்சு.. வாங்கண்ணே காபி சாப்பிட்டுட்டு போகலாம்...!
    கணேஷ் : வேணாம்... நான் அவசரமா வீட்டுக்கு போகணும்...!
    பூபதி : என்னங்கண்ணே...! ரொம்ப நாளைக்கு அப்புறமா ரெண்டு பேரும் மீட் பண்ணியிருக்கோம். வீட்டிற்கு போக துடிக்கிறீங்க. வீட்டுல ஏதாச்சும் விசேஷங்களா?
    கணேஷ் : விசேஷம் ஒன்னுமில்லை. என் பொண்டாட்டி சாப்பிடாம எனக்காக காத்துக்கிட்டு இருப்பா...
    பூபதி : இந்த காலத்துல இப்படி ஒரு பொண்டாட்டியா! அதுவும் கணவன் வரும் வரைக்கும் காத்திருந்து சாப்பிடுற பொண்டாட்டியா! ஆச்சரியமா இருக்கே!
    கணேஷ் : அட போங்க தம்பி! அவளாவது எனக்காக சாப்பிடாம காத்துக்கிட்டு இருப்பதாவது. நான் போய் தான் அவளுக்கு சமைச்சு போடணும்..!
    பூபதி : 😳😳
    ----------------------------------------------------------------------
    வாழ்க்கை...

    வாழ்க்கை என்பது

    ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதீர்கள்...
    ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்...
    ஒரு லட்சியம் - சாதியுங்கள்...
    ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்...
    ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்...
    ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்...!!
    ----------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
    போகூழால் தோன்று மடி.

    விளக்கம் :

    பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக