திங்கள், 18 மே, 2020

7-ம் வீட்டில் புதன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

 புதன் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. கல்வியில் சிறந்து விளங்க ஜாதகத்தில் வித்யாகாரகன் எனும் புதன் பலம்பெறுவது சிறப்பாகும்.

கல்வி, ஞானம், தனாதிபதி, தூதுவன், சங்கீதம், வாக்கு சாதுர்யம், ஜோதிடம், பிரசங்கம், சிற்பத்தொழில், வியாபாரங்கள், புத்திரக்குறைவு, வாத நோய், விஷரோகம் இவைகளுக்கு புதன் காரகன்.

ஜாதகத்தில் மிதுனம், கன்னி ராசிகள் புதன் பகவானுக்குரிய ராசிகளாகும். புதன் கிரகம் பாதி சுப, பாதி அசுப தன்மை கொண்ட கிரகமாக இருக்கிறார்.

லக்னத்தில் 7-ம் இடத்தில் புதன் அமர்ந்தால் அந்த ஜாதகக்காரர் நீண்ட ஆயுளுடன் இருப்பார்.

7ல் புதன் இருந்தால் என்ன பலன்?

👉 அழகான தோற்றம் கொண்டவர்கள்.

👉 எதிர்பாலின மக்களால் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

👉 கூட்டுத்தொழிலின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

👉 விரும்பிய இல்வாழ்க்கை அமையும்.

👉 நிர்வாக பொறுப்புகள் உடையவர்கள்.

👉 திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள்.

👉 சமூக சிந்தனைகளை கொண்டவர்கள்.

👉 வாழ்க்கை துணைவரின் மூலம் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும்.

👉 கல்வியின் மூலம் முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

👉 சாஸ்திரங்களில் நிபுணத்துவம் உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்