இது சிரிப்பதற்கான நேரம்..!!
ஆசிரியர் : உன்னை வரிசையில கடைசியிலதான நிக்க சொன்னேன், ஏன் இங்க வந்த?
மாணவன் : கடைசியில ஏற்கனவே வேற ஒரு பையன் நின்னுக்கிட்டிருக்கான் சார்...
ஆசிரியர் : 😳😳
----------------------------------------------------------------------
தீபக் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!! பொங்கலுக்கு எடுத்ததா?
ராஜ் : இல்லை. எனக்கு எடுத்தது...!
தீபக் : 😩😩
----------------------------------------------------------------------
அருண் : டேய்! ஏன்டா Fan-ஐ ஆப் பண்ணிட்ட?
குமார் : எங்க அப்பாதான் சொல்லியிருக்காரு, வியர்வை சிந்தி சாப்பிடனும்னு!
அருண் : 😵😵
----------------------------------------------------------------------
டாக்டர் : உங்க மாமியாருக்கு ஆப்ரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்...!
அமுதா : என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க...?
டாக்டர் : 😳😳
----------------------------------------------------------------------
ஃபாஸ்ட் ஃபுட்!!
ஒரு பெரிய சிங்கமும், குட்டி சிங்கமும் ஒரு மரத்தடியில் அமைதியாக ரெஸ்ட் எடுத்திக்கிட்டு இருந்துச்சாம்.
அந்த நேரம் ஒரு மான் ரொம்ப ஃபாஸ்ட்டா ஓடுச்சாம்.
அதைப் பாத்து குட்டி சிங்கம் பெரிய சிங்கத்துக்கிட்ட, என்னம்மா இது? இவ்ளோ ஃபாஸ்ட்டா போகுதுன்னு கேட்டுச்சாம்..!
அதுக்கு பெரிய சிங்கம் சிரிச்சிக்கிட்டே சொல்லுச்சாம்... இதுக்கு பேருதான் 'ஃபாஸ்ட் ஃபுட்னு"!!
----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
அமெரிக்கன் : நாங்கதான் முதன்முதலாக விண்வெளிக்குப் போனோம்..
ரஷ்யன் : நாங்கதான் முதன்முதலாக நிலவுக்குப் போனோம்..
நம்மாளு : நாங்கதான் முதன்முதலாக சூரியனுக்குப் போனோம்..
அமெரிக்கன் : பொய் சொல்லாதடா, சூரியனுக்கு கிட்டப் போனாலே எரிஞ்சிடுவாய்..!
நம்மாளு : போடா மடையா, நாங்க போனது இரவில்...!! (விடுவமா நாங்க..?)
----------------------------------------------------------------------
வெற்றி பெற..!!
அழகிய கனவு ஒன்று வேண்டும்...
அதை அடைவதற்கு கடும் முயற்சி வேண்டும்...
அவமானம் பார்க்காத குணம் வேண்டும்...
தூக்கம் தவிர்க்க பழக வேண்டும்...
சிறிய வாய்ப்புகளை நிராகரிக்காமல் இருக்க வேண்டும்...
ஏமாற்றங்களை விழுங்க வேண்டும்...
உள்ளத்தில் ஒரு வெறியாவது ஓயாது புயலாக வீசி கொண்டிருக்க வேண்டும்...
உழைப்பில் உண்மை வேண்டும்...
அனைத்திற்கும் மேலாக பொறுமை வேண்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக