Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஜூலை, 2020

இதில் நீங்கள் யார்?... வழக்கறிஞரா?... நீதிபதியா?... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------------
    சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
-----------------------------------------------------------
ராம் : ஒரு ஆளு ஒரு காக்கா வளத்தானாம், அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம். அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
குமார் : தெரியலையே...
ராம் : My Crow Soft
குமார் : 😂😂
-----------------------------------------------------------
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா?
-----------------------------------------------------------
👨‍⚖️ தன்னுடையது எனும்போது மனிதன் வழக்கறிஞராக இருக்கிறான்...

👨‍⚖️ பிறருடையது எனும்போது நீதிபதியாக மாறிவிடுகிறான்.
-----------------------------------------------------------
  குறளும்... பொருளும்...!!
-----------------------------------------------------------
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

விளக்கம் :

தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவருக்கு எமனை வெல்லுதலும் கைகூடும்.

-----------------------------------------------------------
        விடுகதைகள்...!!
-----------------------------------------------------------
1. சின்னச் சின்ன அறைகள் உண்டு, இது வீடு அல்ல. சிறந்த அழகு கொண்டிருக்கும், சித்திரமும் அல்ல. காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு, கோட்டையும் அல்ல... அது என்ன?

2. ஓரிடத்தில் பிறந்த சகோதரர்கள், சிவப்புத் தொப்பி அணிந்தவர்கள், ஒற்றுமையாக ஒரே அறையில் இருப்பவர்கள், ஒருவர் வீட்டின் சுவரில் உரசினால், அனைவரும் எரிந்து விடுவார்கள்... அது என்ன?

விடைகள் :

1. தேன்கூடு
2. தீப்பெட்டி.
-----------------------------------------------------------
     படித்ததில் பிடித்தது...!!
-----------------------------------------------------------
முட்டாள் பழிவாங்க துடிப்பான்...

புத்திசாலி மன்னித்து விடுவான்...

அதி புத்திசாலி அந்த இடத்திலிருந்து விலகிவிடுவான்...
-----------------------------------------------------------
இப்படி செய்தால் வெற்றி உனக்கே...!!
-----------------------------------------------------------
👉 எதற்கும் அஞ்சாதே...

👉 எதையும் வெறுக்காதே...

👉 யாரையும் ஒதுக்காதே...

👉 உன் பணியை ஊக்கத்துடனே செய்...

👉 வெற்றி உனக்கே...!!
-----------------------------------------------------------
         தமிழ்மொழி...!!
-----------------------------------------------------------
தடுக்கி விழுந்தால் அ, ஆ...
சிரிக்கும்போது இ, 
சூடுபட்டால் உ, ஊ...
அதட்டும்போது எ, ஏ...
ஐயத்தின்போது ஐ...
ஆச்சரியத்தின்போது ஒ, ஓ...
வக்கணையின்போது ஒள...
விக்கலின்போது ஃ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக