Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 ஜனவரி, 2020

இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பான்... எப்படி? - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!

கலக்கலான ஜோக்ஸ் !!
மனைவி : டின்னர் வேணுமா?
கணவன் : சாய்ஸ் இருக்கா?
மனைவி : ரெண்டு இருக்கு!
கணவன் : என்னென்ன?
மனைவி : வேணுமா? வேண்டாமா?
கணவன் : 😏😏
-------------------------------------------------------------------------------------------------------
ஞாபக மறதி கணவன் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே, இன்னைக்கு எப்படி மறக்காம டிபன் பாக்சை ஆபிஸ்ல இருந்து எடுத்துட்டு வந்துட்டேன் பாரு.
மனைவி : ஐயோ, இன்னைக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலயே...
ஞாபக மறதி கணவன் : 😔😔
-------------------------------------------------------------------------------------------------------
மனைவி : 'ஒருநாள் வேலைக்காரி இல்லைன்னா வீடே சரியில்ல பாருங்க."
கணவன் : 'இது பரவாயில்ல. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது"..
மனைவி : 😠😠
-------------------------------------------------------------------------------------------------------
சிறந்த வரிகள் !!
பணத்தின் மிகப்பெரிய பயன், அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வதுதான்!

சாதனை படைக்கப் பிறந்தவர்கள் ஜாதகம் பார்ப்பதில்லை!

ஊக்குவிக்க ஆள் இருந்தால், இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பான்.

திறமையானவர்கள் சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதில்லை, அவர்களே சந்தர்ப்பத்தை உருவாக்குகிறார்கள்.

ஒரு முயற்சி நிறுத்தப்படும்போது தோல்வியாகிறது, அதுவே தொடரப்படும்போது வெற்றியாகிறது.

நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் பின்னால், நம்மை அறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும், மூலகாரணமாகவும் இருக்கிறார்.

தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும், கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்!

பிறரை சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.

விதியை நம்புபவன் எதையும் சாதிக்க மாட்டான்.
-------------------------------------------------------------------------------------------------------

இது சிரிக்க மட்டுமே!!
விடியற்காலை 3 மணி. மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. கணவன் மட்டும் எழுந்து போனான். கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரன் நின்று கொண்டிருந்தார்.

சார் ஒரு உதவி.. கொஞ்சம் அங்க வந்து தள்ளி விட முடியுமா? என்று கேட்டார் அந்த குடிகாரர். கணவனோ 'முடியவே முடியாது" ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே-ன்னு சொல்லிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

யாரது? என்று மனைவி கேட்டாள். எவனோ ஒரு குடிகாரன், வந்து எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான். நீங்க உதவி செஞ்சீங்களா?. இல்லை, மணி 3 ஆகுது, மழை வேற பெய்யுது எவன் போவான்?

பார்த்தீங்களா? 3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி மத்தவங்களுக்கு உதவி செய்யலன்னா எப்படி?

அதைக்கேட்ட கணவன் எழுந்து, சட்டைய போட்டுக்கொண்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனார். ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா? இன்னும் இங்கதான் சார் இருக்கேன். ஏதோ தள்ளிவிடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?

ஆமா சார்... கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும். எங்கே இருக்கீங்க? இங்கதான் கிணத்து பக்கத்துல நின்னுகிட்டு இருக்கேன். வந்து தள்ளிவிடுங்க சார். ஐயோ... பொண்டாட்டி பேச்சைக் கேட்டதுக்கு கொலகாரனாக்கப் பாக்குறானே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக