>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 7 டிசம்பர், 2019

    இது உண்மை அல்லவா? - ரிலாக்ஸ் ப்ளீஸ் !!

    சிதறடிக்கும் ஜோக்ஸ்...!!

    இங்கிலீஷ்காரர் : What is This?
    கடைக்காரர் : This is தயிர்.
    இங்கிலீஷ்காரர் : What is  தயிர்?
    கடைக்காரர் : Milk sleep at night Morning become tight
    யார்கிட்ட நாங்களும் இங்கிலீஷ் பேசுவோம்ல...
    இங்கிலீஷ்காரர் : 😑😑
    -------------------------------------------------------------------------------------------------------
    போலீஸ் : ஏன்டா குடுப்பத்தோட ஜெயிலுக்கு வந்துட்டீங்க?
    சீனு : வெளியில விலைவாசி ஏறிப்போச்சு.. வயிறார சாப்பிட முடியல.. அதான் சார்...
    போலீஸ் : 😳😳
    -------------------------------------------------------------------------------------------------------

    மனைவி : என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
    கணவன் : என்னம்மா விஷயம்?
    மனைவி : நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் இறந்துட்டாராம்.
    கணவன் : செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒன்னு இருக்குல..
    மனைவி : 😠😠
    -------------------------------------------------------------------------------------------------------

    ஆசிரியர் : பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக்கூடாது, பிறர் மனம் நோகப் பேசக்கூடாது.
    மாணவன் : இந்த உலகத்திலேயே வாழக்கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...
    ஆசிரியர் : 😐😐
    -------------------------------------------------------------------------------------------------------

    அருண் : சாமி... நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிஞ்சுட்டேன்...?
    குரு : அடப்பாவி... நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?
    அருண் : நீங்கதானே சாமி கவலைகளைத் தூக்கியெறியணும்னு சொன்னீங்க...
    குரு : 😂😂
    -------------------------------------------------------------------------------------------------------

    இது எப்படி இருக்கு?
    ⭐ சிரிக்க மறந்தவன் சிரமப்படுவான். சீக்கிரம் எழுபவன் சிகரத்தைத் தொடுவான்.

    ⭐ அச்சத்துக்கு மருந்தில்லை.

    ⭐ மனிதன் என்ன சொல்கிறான் என்பது முக்கியமல்ல. என்ன செய்கிறான் என்பதே முக்கியம்.
    -------------------------------------------------------------------------------------------------------

    இது உண்மை அல்லவா?
    👉 பிச்சை போடுவது கூட சுயநலமே...
    புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...

    👉 அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை
    ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் கூட உணர வைக்க முடியாது.
    வாழ்க்கைத் தத்துவங்கள்...!
    🌟 நம்முடன் வாழ்வோரை புரிந்து கொள்வதற்கு, நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.

    🌟 எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.

    🌟 மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால், வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.
    -------------------------------------------------------------------------------------------------------

    குறளும்... பொருளும்...!!
    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
    உள்நின்று உடற்றும் பசி.

    பொருள் :

    மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக