>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 7 டிசம்பர், 2019

    செல்லாண்டி அம்மன் திருக்கோவில், திருப்பூர்

    Image result for செல்லாண்டி அம்மன் திருக்கோவில், திருப்பூர்


     திருமண தடை நீங்கவும், குடும்பத்தில் நிலவும் கஷ்டம் தீரவும், வழிபட வேண்டிய தெய்வம் தான் செல்லாண்டி அம்மன் திருக்கோவில். இந்த திருக்கோவில் திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் நதிக்கரையில் வளம் பாலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

     இந்த நொய்யல் நதியில் இருந்து தான் 1945 முதல் 1970 வரை, அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். மேலும் நொய் என்ற சொல் மென்மை, நுண்மை எனும் பொருள் கொண்டது. இந்த ஆற்றின் பெயர் மென்மையான நுண்ணிய மணற்துகள்களால் பெறப்பட்டது என்றும் கருதப்படுகிறது.

     இந்த நதியில் 16 அடி உயரம் பாம்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது. இந்த நொய்யல் நதியில் உள்ள பாம்பு ஒவ்வொரு வருடமும் அக்னி குண்டம் திருவிழாவின் போது குண்டத்தில் வருவதாக கருதப்படுகிறது.

    அம்பாள் அமைப்பு :

     நான்கு திருகரங்களுடன் நின்ற நிலையில் இருக்கிறார் அம்மன். அம்மனை சுற்றி மயானம் உள்ளது. அம்மனின் வாகனமாக யாழி உள்ளது.

    கோவில் அமைப்பு :

     இந்த கோவிலில் செல்லாண்டி அம்மன் வடக்கு பார்த்தும், பேச்சியம்மன், அரசமரத்தடி விநாயகர், தட்சிணாமூர்த்தி, ரிஷப வாகன சிவன், நீலி தேவி, நீளிகண்டி, மகாமுனி, முத்தையன், கருப்பராயன், முனீஸ்வரன், கிருஷ்ணாம்பாள், கிருஷ்ணா அய்யர், மகேஸ்வரி, வைஷ்ணவி, துர்கை, ராகு கேது ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

    கோவில் வரலாறு :

     திருப்பூரில் வீடு கட்டுவதற்கு கல் எடுத்து வர திருவுடையூருக்கு சென்றனர். அது பாண்டியர் ஆட்சி காலம். அவர்கள் எடுத்து வந்து கொண்டிருந்த பொழுது நொய்யல் நதிக்கரையில் மழை பெய்து தண்ணீர் வெள்ளம் போல காட்சி அளித்தது.

     வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் பாதி கல் மட்டும் எடுத்து வைத்து, மீதி கல்லை கரையில் வைத்து சென்றனர். ஒரு கல்லினை வடக்கு பக்கத்தில் இருந்த வனத்தில் வைத்துவிட்டு சென்றனர். அந்த இடம் தான் இப்போது பிச்சம்பாளையத்தில் இருக்கும் அம்மன் கோவில். மற்றொரு கல்லானது முனியப்பன் கோவிலாக உள்ளது.

     இவர்கள் அனைவரும் மறுநாள் வந்து அந்த கல்லினை தூக்கும் போது அந்த கல் மிகவும் பலமாக இருந்தது. அவர்கள் கல்லினை தூக்கி கொண்டிருக்கும் போது அருகில் அம்மன் தோன்றி என்னை இங்கு வந்து பிரதிஷ்டை செய்வீர். நான் இங்கேயே இருந்து விடுகிறேன் என்று கூறினார். அந்த கோவில் தான் இப்போது எழுந்தருளி இருக்கும் செல்லாண்டி அம்மன் கோவில்.

    வேண்டுதல்கள் :

     இந்த கோவிலில் திருமண தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும், பக்தர்களின் குடும்ப கஷ்டம் தீர்வதர்க்கும், வியாபாரம் செழிப்பதர்க்கும், பில்லி சூனியம் தீரவும் மக்கள் இங்கு அதிகமாக வருகின்றனர்.

    பக்தர்கள் இங்கு வந்து தங்களின் கோரிக்கை நிறைவேறிய உடன் பால் குடம் எடுக்கின்றனர். பிறகு அக்னி குண்டம் மிதிக்கின்றனர். அம்மனுக்கு பட்டினால் ஆன புடவையை வாங்கி கொடுத்தும், அபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும், விளக்கு ஏற்றியும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக