>>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 7 டிசம்பர், 2019

    பணக்காரனாக மாறிய ஏழை..!

     Image result for பணக்காரனாக மாறிய ஏழை..!


    ராமு என்ற ஏழையிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன. அதில் கிடைக்கும் பாலில் தான் அவரது வருமானம். மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினார். ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர். ராமுவும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னார். அவரும் இன்று முதல் உன் வாழ்க்கை உயரும் என்று ஆசி கூறினார்.

    அன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன. எப்படி நடந்தது என்று தெரியாதபடி வருமானம் பெருகியது. இரண்டு மாடுகள் நாலாகி, நான்கு எட்டாகி இப்போது அவரிடம் முப்பது மாடுகள் உள்ளன. சிறிய கூரை வீடு பெரிய காரை வீடு ஆனது. ஆண்டுகள் கடந்து சென்றன. மீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார்.

    தான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் ராமு தன்னைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் ராமு வரவில்லை. மனதில் அவருக்கு ஒரு சிறிய வருத்தம். இருந்தாலும் அவரே நேராக அவர் வீட்டுக்குப் போனார். அவர் சென்ற நேரத்தில் அவர் மாடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அவரது மனைவி ஞானியை வரவேற்று அமர வைத்து விட்டு அவரது வருகையை கணவனிடம் தெரிவித்தாள்.

    அவரும் கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்துவிடுவதாக சொல்லி அனுப்பினார். அதனால் ஞானிக்கு கோபம் வந்துவிட்டது. காசு பணம் வந்ததும் பழசை எல்லாமே மறந்து விட்டாயா, நன்றி கெட்டவனே!. இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது. பழையபடி இரண்டே மாடுதான் இனி எப்போதும் உனக்கு இருக்கும்!. என்று சபித்து விட்டு சென்று விட்டார். அவர் பேசியது எல்லாம் அவன் காதில் விழ, பதறியடித்து ஓடி வந்தான். அவர் இப்படிக் கோபித்துக் கொள்வாரென்று அவர் நினைக்கவே இல்லை. அவரைத் தேடி சென்றார். ஆனால் அவர் எங்கு எனத் தெரியவில்லை. சோர்ந்து போய் வீடு திரும்பினார். கொல்லைப் புறத்தில் அவர் சபித்த படியே இரண்டே மாடுகள் தான் இருந்தது. தலையில் அடித்துக் கொண்டு அழுதார். என் அலட்சியத்தால் எல்லாம் போச்சே. இனி பழையபடி வறுமையில் கஷ்டப்படப் போறோமே! என்று புலம்பினார். அவர் மனைவி அவர் அருகில் வந்து சொன்னாள், இந்த இரண்டு மாட்டையும் இப்பவே சந்தையில் கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க என்று கூறினாள்.

    அவருக்கு மேலும் குழப்பம் வந்தது. மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்யறது?. இதைத் தவிர வேறு எந்த தொழிலும் எனக்கு தெரியாதே என்றான். மனைவி மறுபடியும் மாடுகளை விற்க வலியுறுத்தினாள். சரி போ. நடக்கறது நடக்கட்டும் என்று சொல்லி இருந்த இரு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு சந்தைக்குக் கிளம்பினார். நன்றாக வளர்க்கப்பட்ட மாடுகள் என்பதால் உடனே நல்ல விலைக்கு விற்பனையானது.

    மனது கணக்க, கண்ணில் கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தார். அவரது மனைவியோ முகம் நிறைந்த புன்னகையோடு அவரை வரவேற்றாள். ராமுவுக்கு ஒன்றுமே புரியவில்லை!. உடனே மனைவி கொஞ்சம் கொல்லைப் புறத்தில் போய்ப் பாருங்க என்றாள். அங்கு பார்த்த ராமுவால், அவர் கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை. அங்கே வேறு இரண்டு புதிய மாடுகள் இருந்தன. கேள்வியுடன் மனைவி முகத்தை ஏறிட்டார். அதற்கு அவர் மனைவி, எப்பவும் உங்க கிட்ட இரண்டு மாடுதான் இருக்கும் என்பதுதானே சாபம்? அப்ப நீங்க இரண்டு மாட்டையும் விற்றாலும் அதே இடத்துக்கு இரண்டு மாடு வந்திடும் இல்லையா? என்று கூறினாள்.

    உடனே ராமுவுக்கு, புத்தியுள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் பாக்கியவான் என்பது புரிந்தது. அன்று முதல் தினமும் இரண்டு மாடுகளை விற்க ஆரம்பித்தார். முன்பை விடப் பெரிய பணக்காரன் ஆனார்.

    நீதி :

    சில நேரத்தில் நாம் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவள் தான் மனைவி.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக