>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 7 டிசம்பர், 2019

    கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்..!

      Image result for கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்..!
    கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு எதிர்காலத்தை வகுத்துக் கொள்ளும் வல்லமை உடையவர்கள். அறிவில் சிறந்தவர்கள். கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். இரக்க குணமுடையவர்கள். கண்ணியமானவர்கள். இவர் அதிகமாக யாரிடத்திலும் பழகமாட்டார்கள். ஆனால் இவர்கள் எதிரிகளைத் தன் வசமாக்கிக் கொள்ளும் திறமையை கொண்டிருப்பார்கள்.

     இம்மாதத்தில் பிறந்தவர்கள் ஒரு செயலில் இறங்கி விட்டால் அந்த செயலை சிறப்பாக செய்து முடித்தே தீருவார்கள். இம்மாதத்தில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே பல சோதனைகளை சந்திப்பார்கள். அதனால் இம்மாதத்தில் பிறந்தவர்கள் இளமையிலேயே முதுமை அனுபவத்தை பெற்றிருப்பார்கள். கடவுளின்மீது அதிக பற்று கொண்டிருப்பார்கள். சகிப்புத் தன்மையால் உயர்ந்த அந்தஸ்தை எளிதில் அடைவார்கள்.

     இம்மாதத்தில் பிறந்தவர்கள், எந்த ஒரு காரியத்தையும் சாமர்த்தியமாக செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் உடையவர்கள். இவர்களைப் பற்றி யார் என்ன நினைத்தாலும், தன்னுடைய குறிக்கோளை மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் மற்றவர்களிடத்தில் உள்ள குற்றங்களையும், குறைகளையும் மறைக்காமல் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கூறிவிடுவார்கள். அதனால் இவர்களுக்கு நண்பர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.

     கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள், தம்மைப் பற்றி புறம் பேசுபவர்களையும், தனக்கு தீங்கு விளைவிக்க முயன்றவர்களையும் பழிக்குப் பழி வாங்கும் குணம் கொண்டிருப்பார்கள். ஆனால் இம்மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடைய குறைகளைப் போக்குவதில் சுயநலமாக நடந்து கொள்ளமாட்டார்கள். இவர்கள் குளிர்பான பிரியர்களாக இருப்பார்கள்.

    இந்த மாதத்தில் பிறந்த பெண்களின் நிலை சிறப்பாக இருக்கும். இவர்கள் ஒரு குழந்தை போல மற்றவர்களிடம் பழகுவார்கள். இம்மாதத்தில் பிறந்த பெண்கள் பெரியவர்களிடம் மரியாதையாகவும், பணிவுடனும் நடந்து கொள்வார்கள். மேலும் இப்பெண்கள் தானம், தர்மம் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு சகல பாக்கியங்களும் உண்டாகும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக