திண்டுக்கல்லில் இருந்து ஏறத்தாழ 91கி.மீ தொலைவிலும், வத்தலக்குண்டுவில் இருந்து ஏறத்தாழ 53கி.மீ தொலைவிலும், கொடைக்கானலில் இருந்து ஏறத்தாழ 7கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய இடம்தான் வெள்ளி நீர்வீழ்ச்சி.
இந்த அருவி திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் போகும் வழியில் சாலையின் அருகில் அமைந்துள்ளது.
கொடைக்கானல் நகருக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளை பன்னீர் தெளித்து வரவேற்பது போல இயற்கையாகவே அமைந்துள்ளது வெள்ளி நீர்வீழ்ச்சி.
கொடைக்கானல் ஏரி மற்றும் பல இடங்களிலிருந்து மலைப்பாதை வழியாக வந்து பல அடி உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டும் இடம்தான் வெள்ளி நீர்வீழ்ச்சி.
இந்த அருவியில் குளிக்க முடியாது. கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பி காணும் இடமாகவும் வெள்ளி நீர்வீழ்ச்சி இருக்கிறது.
பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கும். அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் அருவியுடன் சேர்த்து புகைப்படத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
வெள்ளி நீர்வீழ்ச்சியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும்.
எப்படி செல்வது?
திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
பில்லர் ராக்.
பிரையண்ட் பூங்கா.
குக்கல் குகை.
பசுமை பள்ளத்தாக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக