முல்தானி மெட்டி தெரியுமா? அழகை பாதுகாக்கும் யுவதிகளுக்கு
இதன் அத்தனை அழகு தரும் குணங்களும் தெரிந்திருக்கும். அழகு நிலையங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படும்
முல்தானி மெட்டியை சரியான முறையில் பயன்படுத்தினால் எதற்காக எடுத்துகொள்கிறோமோ அந்த
குறைபாட்டை நீக்கி அழகை அதிகரிக்கலாம்.
என்ன இருக்கு
முல்தானி மெட்டியில் சருமத்துக்கு
அழகை கொடுக்கக்கூடிய இயற்கை பொருள்.அதனால் தான் இன்று அனைத்து அழகு நிலையங்களிலும்
பிரதானமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒருவகை களிமண் என்றாலும் இதில்
மெக்னீசியம், சிலிக்கான், இரும்பு, கால்சியம், கேல்சேட், டாலமைட் போன்ற தனிமங்களை கொண்டிருக்கிறது
இது சருமத்துக்கு அதிக நன்மைகளைத் தருகிறது. சருமத்தில் இருக்கும் அழுக்கு, கசடுகளை
நீக்க உதவுகிறது. எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் சருமத்தை சுத்தப்படுத்த உதவுகிறது என்பதால்
இயற்கையாக அழகைப் பெற இதை அச்சமின்றி பயன்படுத்தலாம்.
எண்ணெய் சருமத்துக்கு
தேவை
முல்தானி மெட்டி- 2 டீஸ்பூன்
சந்தனத்தூள் - 2 டீஸ்பூன்
பன்னீர் - 2 டீஸ்பூன்
அனைத்தையும் சேர்த்து நன்றாக
கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போல் போட்டு நன்றாக காய விடுங்கள். பிறகு காய்ந்ததும்
மிதமான நீரில் முகத்தை கழுவி விடுங்கள்.
என்னபயன்
சருமத்தில் இருக்கும் இயற்கையான
எண்ணெய் பசையை உறிஞ்சு கொள்வதோடு சருமதுவாரங் களில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி
அடைப்பை நீக்குகிறது. இயற்கையாகவே சருமத்தின் பிஹெச் அளவை அதிகரிக்கிறது.
அதிக எண்ணெய் பசையுள்ள சருமம்
உள்ளவர்கள் தினமும் இந்த பேக் பயன்படுத்தலாம். மிதமான எண்ணெய் சருமமாக இருந்தால் வாரம்
ஒரு முறை செய்தால் போதும்.
சரும நிறம்
தேவை
முல்தானி மெட்டி - 4 டீஸ்பூன்,
தயிர்- அரை கப்,
கற்றாழை சாறு- 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
முகம், கழுத்து, கை, கால் பகுதியில்
சூரிய ஒளியின் தாக்கத்தால் நிறம் மங்கியிருக்கும். அப்படி இழந்த நிறத்தை மீட்க இந்த
பேக் உதவும். கொடுத்திருக்கும் பொருள்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி பத்து
நிமிடங்கள் ஊறவிடுங்கள்.
பிறகு முகம் கழுத்து, கை, கால்
பகுதியில் தடவி பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து முகத்தை மிதமான நீரில் கழுவுங்கள்.
பிறகு ஐஸ்கட்டிகள் வைத்து தேய்த்து மசாஜ் செய்தால் சருமத்தின் நிறம் மாற்றமடையும்.
புண்களின் வடுக்களை போக்கும்
முல்தானி மெட்டி பொடி - 1 டீஸ்பூன்
கற்றாழை சாறு- 2 டீஸ்பூன்
பால் - 4 சொட்டு
அனைத்தையும் ஒன்றாக கலந்து சேர்த்து
இறுக்கமாக இருக்கும்படி கலக்கவும். முகத்தில் புண்க ளால் ஏற்பட்டுள்ள வடுக்கள், தழும்புகள்
இருக்கும் இடத்தில் மட்டும் இதை தடவி வந்தால் புண்க ளால் உண்டாகும் வடுக்கள் நாளடைவில்
சரியாகும். வடுக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.
பலன்
தொடர்ந்து இதை தடவி வரும்போது
புண்களால் உண்டாகும் தழும்புகள், அடையாளங்கள், கருமை கள் நீங்கி வருவதை பார்க்கலாம்.
கை, கால்களில் இருக்கும் காயங்களின் அடையாளங்களையும் போக்கும்.
முகப்பருவுக்கு
முல்தானி மெட்டி - 3 டீஸ்பூன்
வேப்பிலை அல்லது புதினா - 10
இலைகள்
கற்றாழை சாறு அல்லது எலுமிச்சை
சாறு - தேவைக்கு
வேப்பிலை அல்லது புதினா இலையை
மிக்ஸியில் இறுக்கமாக மைய அரைக்கவும். முல்தானி மெட்டி பொடியுடன் இதை அரைத்து சாறு
சேர்த்து நன்றாக இறுக்கமாக கலந்து முகத்துக்கு ஃபேஸ் பேக் போல் போடவும். அவை சருமத்தை
இறுக்கி பிடித்து காயும் வரை வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரால் துடைத்து முகத்தை
கழுவி உலர விடவும். இறுதியில் கெமிக்கல் அதிகம் இல்லாத மாய்சு ரைஸர் தடவினால் பருக்கள்
வேரோடு மறையும் என்பதோடு அவை இருந்த வடுக்களும் காணாமல் போகும். பருக்கள் அதிகமாக இருக்கும்
போது வாரத்துக்கு இரண்டு நாள் இப்படி செய்துவந்தால் போதுமானது.
பாத ஆரோக்கியத்துக்கு
தேவை
முல்தானி மெட்டி பொடி - 3 டீஸ்பூன்
பன்னீர் - 2 டீஸ்பூன்
இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இரவு நேரத்தில் பாதத்தை சுத்தமாக கழுவி உலர வைத்து பாதத்தின் மேல் மற்றும் கீழ் பகுதியில்
நன்றாக குழைத்து மசாஜ் போல் போட்டு அப்ளை செய்யுங்கள். இப்படி செய்யும் போது இரத்த
ஓட்டம் சீராக இருக்கும். பாதத்தில் வெடிப்புகள் இருந் தாலும், பாதத்தில் அழுக்குகள்
படிந்திருந்தாலும் அவை நீங்குவதோடு பாதம் பளிச்சென்று இருக் கும்.தசைகளை தளரவும் செய்யும்.
சரும சுருக்கம் வராமல் இருக்க
முல்தானி மெட்டி - 3 டீஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு- 1 முட்டையிலிருந்து
எடுத்தது
தேன் - 2 டீஸ்பூன்
இஞ்சி சாறு- கால் டீஸ்பூன்
க்ளிசரின் - 3 டீஸ்பூன்
அரிசி மாவு - அரை டீஸ்பூன்
முல்தானி மெட்டி, அரிசி மாவு,
தேன், க்ளிசரின் அனைத்தையும் ஒன்றாக முதலில் கலந்து விடுங் கள்.இறுதியாக முட்டையின்
வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள். அப் போதுதான் எல்லாம் ஒன்று சேரும்.
பிறகு இந்த ஃபேக்கை நன்றாக முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து முகத்தை துடைத்து எடுத்தால்
தளர்ச்சியான சருமமும் இறுக்கத்தை கொடுக்கும்.
நிறத்தை கொடுக்கும்
சருமத்தை இயல்பாகவே வெள்ளையாக
மாற்றுவதில் இயற்கை தந்திருக்கும் அழகு பொருளில் முக்கியமானது முல்தானி மெட்டி.. சிலருக்கு
வெளிப்புறம் நிறம் மங்கியும் உள்புறம் நிறமாகவும் இருக்கும். அவர்களுக்கு செயற்கை நிறம்
தரும் க்ரீம்களை விட இயற்கை பொருள்கள் நிறைந்த இந்த முல்தானி மெட்டி அதிக பலன் கொடுக்கும்.
எந்த பொருளாக இருந்தாலும் அதை
ஒரு முறை மட்டும் பயன்படுத்திவிட்டு பலன் எதிர்பார்க்க கூடாது. தொடர்ந்து பயன்படுத்தும்
போது இது தரும் பலனை நீங்களே உணர்வீர்கள்.
|
|
|
||
|
|
|
||
|
|
|||
|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக