>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 7 டிசம்பர், 2019

    நமது ஆரோக்கியம்... நமது கையில்... என்ன செய்யலாம்?


     Image result for ஆரோக்கியத்திற்கு
    ங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இதை ட்ரைப் பண்ணிப்பாருங்க !!

    பல வகையான மாறுபட்ட சூழ்நிலைகளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... இந்நிலையில் நாம் நம் உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். எப்படி, எவ்வாறு நம் உடலை பாதுகாத்து கொள்ள வேண்டும்? என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

      இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, உடல்நலத்தை காக்கும் செலினியம் போன்றவை நட்ஸ் வகை உணவுகளில் அதிகம் உள்ளது. எனவே தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகை உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலை ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் வைத்துக்கொள்ள முடியும்.

      காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுங்கள். காலை உணவையும், இரவு உணவையும் 11 மணிக்கு மேல் சாப்பிடாமல், 8 முதல் 9 மணிக்குள் சாப்பிட பழகிக் கொள்ளுங்கள்.

      அதிக பசியின்போது அதிகமாக உணவை சாப்பிடக்கூடாது. இது உடல்நலப் பிரச்சனைகளையும், உடல் பருமனையும் அதிகரிக்கும்.

      தினந்தோறும் அளவாக காபி பருகுவதன் மூலம் சர்க்கரை நோய், உணவுக்குழாய் கேன்சர், ஈரல் நோய்களைத் தடுக்கலாம். உங்கள் தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது.

     ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமிடுவதில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பங்கு அதிகம் உள்ளது. எனவே 5 வகை பழங்கள், காய்கறிகளை தினந்தோறும் சாப்பிடுங்கள். உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை தினந்தோறும் மேற்கொள்ளுங்கள்.

      பழங்கள், காய்கறிகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கேன்சர், இருதய நோய்கள் போன்ற பல நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

      வாரத்தில் இருமுறையாவது மீனை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
     குளிர்பானத்தை தொடர்ந்து பருகுவது தொப்பை உண்டாவதற்கு ஒரு முக்கியக் காரணம். எனவே டயட் குளிர்பானங்களை அருந்தலாம் அல்லது ஜுஸஷுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.

    உணவை நன்றாக மென்று சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும் முன்பு 15 முறை மெல்ல வேண்டும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக