Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 டிசம்பர், 2019

கடக ராசி ஆங்கில வருட ராசிபலன்கள் 2020

 Image result for ஆங்கில வருட ராசி பலன் 2020
வைராக்கிய குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!! !!
மங்களகரமான விகாரி தமிழ் வருடத்தில், சதய நட்சத்திரத்தில் சஷ்டி திதியில் வ்யாகாதம் யோகத்தில் ஆங்கில புத்தாண்டு துவங்க இருக்கின்றது.
உங்கள் ராசிநாதனான சந்திரன் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சிப்பெற்ற நிலையில் இருப்பதால் நெருக்கமானவர்களிடம் உரையாடும்போது வார்த்தைகளில் கோபத்தை குறைத்து கனிவுடன் பேசவும். குடும்பத்தில் சுபக்காரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆடை, ஆபரணங்களை கையாளும்போது விழிப்புணர்வு தேவை. வாழ்க்கையில் முன்னேற்றமான பலன்கள் சாதகமாக அமையும்.
மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான எண்ணங்கள் மேலோங்கும். புத்திரர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
இளைய உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். குடும்ப நபர்களுடன் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் சில நேரங்களில் ஏற்படும் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
மற்றவர்களின் புகழ்ச்சிக்கு மயங்காமல் சிந்தித்து செயல்படுவதன் மூலம் பதவியில் இருந்த மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்ள இயலும். கட்சி சார்ந்த பணிகளில் உயர் அதிகாரிகளால் மேன்மை உண்டாகும். புதிய நபர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும்.
விவசாயிகளுக்கு :
கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வயல்வெளிகளில் தேவையற்ற களைச்செடிகளை அகற்றி பராமரிக்கவும். பயிர் விளைச்சலை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகளுக்கு :
அழகு சாதனப் பொருட்களின் மூலம் லாபம் மேம்படும். இயந்திரம் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வியாபார போட்டிகளை புதிய நுட்பமான முறைகளில் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
மாணவர்களுக்கு :
கிடைக்கும் வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்வதன் மூலம் முன்னேற்றமான சூழல் ஏற்படும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நன்மை அளிக்கும். விளையாட்டு துறையில் சாதனை புரிவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் கிடைக்கும்.
பெண்களுக்கு :
தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
அரசுத்தொடர்பான பணிகளில் இருப்போர்க்கு எதிர்பாராத இடமாற்றம் நேரிடலாம். பணி நிமிர்த்தமான விவரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உங்களின் மீதான செல்வாக்கு அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். சபைகளில் பொறுப்புகளும், செல்வாக்கும் உயரும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு அமையும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.
பரிகாரம் :
குருமார்களை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர மேன்மை உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக