கணவன் : மனைவிக்கு (WIFE) அர்த்தம் தெரியுமா?
வித்அவுட் இன்பர்மேஷன் ஃபைட்டிங் எவ்ரிதிங் (Without Information Fighting
Everything)
மனைவி : அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க!
வித் இடியட் ஃபார் எவர் (With Idiot For Ever)
கணவன் : தேவைதான்டி எனக்கு!
மனைவி : 😂😂
--------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : பாடம் எல்லாம் முடிஞ்சிப் போச்சு...
ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க...
மாணவன் : 🙋சார் உங்க பெண்ணு பேரு
என்ன சார்?
ஆசிரியர் : 😳😳
--------------------------------------------------------------------------------------------------------
சிந்தனைத் துளிகள்..!!
உன் அறிவு ஒரு விளக்கு,
மற்றவர்கள் தங்கள் மெழுகுவர்த்திகளை
அதில் ஏற்றிக்கொள்ளட்டும்.
செல்வம் பெருக பெருக ஆசை அதிகமாவது போல,
அறிவு பெருக பெருக அதில் ஆர்வம் அதிகமாகும்.
அறிவு ஆட்சி செய்யும் இடத்தில்,
ஆற்றல் துணை செய்யும்.
அறிவாளி முன்யோசனையின் மூலம் தீயவற்றை
தவிர்க்கிறார்.
அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது.
அது மனதை ஒருமுகப்படுத்துவது.
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய
மருந்து.
அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான
பயங்களும் அகன்றுவிடும்.
--------------------------------------------------------------------------------------------------------
தன்னம்பிக்கை..!!
அதிக நேரம் இருக்காது அதிர்ஷ்டம்...!!
நீண்ட தூரம் வராது சிபாரிசு..!!
எல்லா பொழுதும் கிட்டாது உதவி...!!
ஆனால் எப்போதும் ஜெயிக்கும் தன்னம்பிக்கை...!!
வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது...
விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட...
விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவனே
ஜெயிப்பான்..!
--------------------------------------------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
மௌனம்.... மொழியற்ற உணர்வுகளின் ஊடகம்...
மௌனம்.... சத்தமின்றி ரத்தமின்றி யுத்தம்
செய்யும் போர்க்களம்...
மௌனம்... சில வேலைகளில் நம் மானம் காக்கும்
ஆயுதம்...
நான் பேசிய வார்த்தைகளுக்கு நான் பொறுப்பாளி.
ஆனால், நீ புரிந்து கொண்டதற்கு எல்லாம் நான் பொறுப்பல்ல.
சோம்பல் உன்னை ஏமாற்றாமல் காத்துக்கொள்.
ஏனெனில், அதற்கு இன்று ஒருநாளை கொடுத்தால், அது அடுத்த நாளையும் திருடிக்கொள்ளும்.
--------------------------------------------------------------------------------------------------------
திருக்குறள்.!!
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
விளக்கம் :
மனசாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது.
அப்படி சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக