ஆசிரியர்
: நம்ம பள்ளியில் மொத்தம் 5 மாடிகள் இருக்கு. ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுகள்
இருக்கு. ஐந்தாவது மாடிக்கு போகணும்னா எத்தனை படிக்கட்டுக்கள் ஏறணும்?
மாணவன்
: எல்லா படிக்கட்டையும்தான் ஏறணும் சார்!
ஆசிரியர்
: 😳😳
-----------------------------------------------------------------------------------------------------------
வார்த்தைகளின் முக்கியத்துவம்...!!
மருத்துவர்
ஒரு பெண்மணிக்கு சில மருந்துகளை பரிந்துரைத்துவிட்டு நீங்கள் இதை விடாமல்
தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்றார்..
பெண்மணி
: எவ்வளவு காலம் டாக்டர்... நான் சாகும் வரை சாப்பிடணுமா?
டாக்டர்
: நீங்கள் வாழும் வரை...
சாகும்
வரை... வாழும் வரை... என்ற இரு வாக்கியங்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன.
ஆனால், சாகும் வரை என்பதில் அதிருப்தி, அச்சம் தரும் ஓர் எதிர்மறை எண்ணம்
எழுகிறது. ஆனால், வாழும் வரை என்பதில் ஆறுதல் தரும் நேர்மறை எண்ணம் ஏற்படுகிறது.
சொற்களில்
என்ன இருக்கிறது? அதை புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது. என்று வாதாடலாம்...
ஆனால்,
சில
வார்த்தைகள் ரணப்படுத்தும்...
சில
வார்த்தைகள் குணப்படுத்தும்...
அடுத்தவரை
ஊக்குவிக்கும் வார்த்தைகளை மட்டும் பேசலாம்.
அடுத்தவரை
சோர்ந்து போகச் செய்யும் வார்த்தைகளை தவிர்க்கலாம்...
-----------------------------------------------------------------------------------------------------------
எங்கு எதிர்த்து நிற்க வேண்டும்?
தவறேதும்
செய்யாமல் தன்மானத்தை சீண்டும் நிலை வந்தால் எவரையும், எங்கேயும் எதிர்த்து
நில்லுங்கள்..தப்பே இல்லை...
-----------------------------------------------------------------------------------------------------------
எப்போது வாழ்க்கை சிறக்கும்?
ஒரு
சிலவற்றை ஆராய்ந்து மனதை காயப்படுத்தி கொள்வதை விட...
அனைத்தும்
நமக்கான பாடம் என்று அதை அனுபவமாய் எடுத்துகொள்ளுங்கள்...வாழ்க்கை சிறக்கும்...
-----------------------------------------------------------------------------------------------------------
ஒரு குட்டி கதை...!!
ஒரு
ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது
அவரது வழக்கம்.
ஒருநாள்
காலையில் சூரிய உதயத்திற்கு பதில் பிச்சைக்காரன் முகத்தில் விழித்துவிட்டார்.
அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது.
கடுப்பாகிய அரசர் பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட
கட்டளையிட்டார்.
பிச்சைக்காரன்
கலங்கவில்லை, மாறாக கலகலவென சிரிக்க தொடங்கினான்.
அரசருக்கு
மேலும் கோபம்... மற்றவர்களுக்கு திகைப்பு... அப்போது பிச்சைக்காரன் சொன்னான்...
என் முகத்தில் நீங்கள் விழித்ததால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே.
ஆனால்,
உங்கள் முகத்தில் நான் விழித்ததால் என் உயிரே போக போகிறதே அதை எண்ணி சிரித்தேன்
என்றான்.
அரசன்
தன் தவறை உணர்ந்து தலை குனிந்தார். தண்டனை ரத்து செய்யப்பட்டது.
தைரியம்
என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக்
கொள்ள முடியாமல் போய்விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக