>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 14 மே, 2020

    வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ள... இப்படி இருங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    இது சிரிக்க மட்டுமே..!!

    ராமு : ஏன் சோகமா இருக்க?
    கோபு : ஆசையே துன்பத்துக்கு காரணமுன்னு இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்.
    ராமு : அப்படி என்ன தெரிஞ்சுக்கிட்ட?
    கோபு : என் மனைவியை ஆசைப்பட்டுதானே திருமணம் செஞ்சுக்கிட்டேன்.
    ராமு : 😂😂
    ---------------------------------------------------------------------
    பாபு : தேர்தல் நேரத்துல நாயா உழைச்சேன்னு தலைவர் மேடையில பேசுனது தப்பா போச்சு...
    குமார் : ஏன் என்னாச்சு...?
    பாபு : இப்பெல்லாம் கூட்டத்துல யாரும் தக்காளி, முட்டை வீசுறதில்லை... பிஸ்கெட்தான் வீசுறாங்க...
    குமார் : 😬😬
    ---------------------------------------------------------------------
    கற்றுக்கொள்...!!

    புத்திசாலியாய் இரு...
    முட்டாளாய் நடி...
    வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ளலாம்...
    வெற்றிக்கு வழி...
    மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதுதான்
    வெற்றிக்கு ஏற்ற வழியே தவிர...
    பாதியில் விட்டு விட்டு ஓடுவது
    வெற்றிக்கு வழி ஆகாது...
    ---------------------------------------------------------------------
    சிறந்த வரிகள்...!!

    🌟 விதையின் தன்மை விளைச்சலில் தெரியும்.
    மனிதனின் மேன்மை அவன் செயல்பாட்டில் தெரியும்.

    🌟 இன்பமோ, துன்பமோ சகித்துக்கொண்டு ரசித்து வாழ்ந்தால்,
    நாம் வாழும் வாழ்க்கையும் அழகுதான்.

    🌟 உன்னிடம் உள்ள பலம், பலவீனத்தை அறிந்துகொள்.
    பலவீனத்தை பலமாக‌ மாற்று.
    உன் வாழ்க்கை உன் கையில் இருக்கும்.
    ---------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

    விளக்கம் :

    இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக